YouTurn

ஆதியோகியின் 112 அடி உயரச்சிலை கின்னஸ் சாதனை.

ஆதியோகியின் 112 அடி உயரச்சிலை கின்னஸ் சாதனை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம் . ஈஷா அறக்கட்டளையின் சார்பில் 24 பிப்ரவரி 2017ல் ஆதியோகியின் 112 அடி உயரத் திருமுகச்சிலை நிறுவப்பட்டது . இச்சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார் . ஆதியோகியின் 112 அடி உயர...

பரவிய செய்தி

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட ஆதியோகியின் 112 அடி உயர திருமுகச்சிலை , உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது .

விரிவான விளக்கம்

 தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம் . ஈஷா அறக்கட்டளையின் சார்பில் 24 பிப்ரவரி 2017ல் ஆதியோகியின் 112 அடி உயரத்  திருமுகச்சிலை நிறுவப்பட்டது . இச்சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார் . ஆதியோகியின் 112 அடி உயர  திருமுகச்சிலையானது உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது .


 கின்னஸ் சாதனை படைத்த ஆதியோகியின் 112 அடி உயர மார்பளவு சிலையின் உயரம் 34.24 (112 அடி) , அகலம் 24.99(81 அடி) , நீளம் 44.9 (147 அடி) ஆகும் . கின்னஸ் புத்தகத்தில் , ஈஷா அறக்கட்டளை உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலையை 11 மார்ச் 2017ல் உருவாக்கியதாகக் உறுதி செய்கிறோம் என்று குறுப்பிட்டுள்ளனர்  . இதன் மூலம் ஈஷா அறக்கட்டளை இரண்டாவது கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது .


 27 அக்டோபர் 2006 ஆண்டில் ஈஷா அறக்கட்டளையால் 8,52,587  மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது . உலகின் முதல் யோகியான ஆதியோகி , மனிதனின் தன்னிலை மாற்றத்துக்கென 112 வழிமுறைகளை கூறியதாகவும் , அதன் குறியீடே 112 அடி உயர சிலை என்று ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார் .


 மேலும் இந்தியாவில் 3 பகுதிகளில் ஆதியோகியின் திருமுகச்சிலை நிறுவ இருப்பதாக கூறியுள்ளார் . ஆதியோகியின் மார்பளவு சிலையை திருந்து வைக்க பிரதமர் அவர்கள் வந்த போது எதிர்ப்புகள் பல வந்தன . வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் இருந்த காடுகளை அழித்து இச்சிலை நிறுவியதாக மக்கள் பலர் கூறி வந்தனர் . மேலும் அனுமதி வாங்கப்படாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா யோகா மையத்தின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன .

சுருக்கமாக

ஈஷா யோகா அறக்கட்டளை இதன் மூலம் இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க