YouTurn

அரியலூர் மாணவர்களின் கல்விக்காக உதவிய விஜய் சேதுபதி.

அரியலூர் மாணவர்களின் கல்விக்காக உதவிய விஜய் சேதுபதி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

விஜய் சேதுபதி அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக பெற்ற வருமானத்தில் ஒரு பகுதியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்ளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்குவதாக கூறியுள்ளார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “ நான் விளம்பரப் படங்களில்...

பரவிய செய்தி

அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த வருமானத்தில் ரூ 50 லட்சத்தை மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்விக்காக உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

விரிவான விளக்கம்

விஜய் சேதுபதி அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக பெற்ற வருமானத்தில் ஒரு பகுதியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்ளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்குவதாக கூறியுள்ளார்.


இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “ நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். எனினும், சில விளம்பரப் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரத்தில் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மாணவர்ளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவெடுத்துள்ளேன்.


தமிழ்நாட்டில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 38,70,000 ரூபாயும், தமிழகத்தில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் 50,000 வீதம் ரூ 5 லட்சமும், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதம்  5,50,000 ரூபாயும் வழங்க உள்ளேன்.


மேலும், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் ஹெலன்ஹெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ 50,000 வீதம் மொத்தம் 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தமிழக அரசிடம் வழங்க உள்ளேன். அரியலூர் மாவட்டத்தில் இருந்து அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவராக ஆசைப்பட்டு, அத்தகைய கனவு நிறைவேறாமல் உயிர் நீத்த மாணவி அனிதாவின் நினைவாக இத்தொகையை வழங்குகிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் சேதுபதியின் இத்தகைய செயலுக்கு ஊடகங்கள், இணையங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சுருக்கமாக

அரியலூர் மாவட்டம் மாணவி அனிதாவின் நினைவாக மாணவர்களின் கல்வி உதவிக்காக ரூ 50 லட்சம் அளிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க