YouTurn

அரசின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இந்தியா முதல் இடமா ?

அரசின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இந்தியா முதல் இடமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது இச்செய்தி , ஆம் ஒட்டு போடும் பொழுது மட்டும் தான் இத்தகைய நம்பிக்கை மக்கள் மனதில் இருக்கும் . இம்முறையாவது நமக்கு நல்லது நடக்காதா என்று எண்ணி புதிய ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் . ஆனால் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தவறு ...

பரவிய செய்தி

அரசின் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது .

விரிவான விளக்கம்

அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது இச்செய்தி , ஆம் ஒட்டு போடும் பொழுது மட்டும் தான் இத்தகைய நம்பிக்கை மக்கள் மனதில் இருக்கும் . இம்முறையாவது நமக்கு நல்லது நடக்காதா என்று எண்ணி புதிய ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் .


ஆனால் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தவறு . அப்படியானால் நம்நாட்டிற்கு எந்த இடம் கிடைத்துள்ளது என்று பார்த்தால் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது . அரசின் மீது அந்த அளவிற்கு எப்பொழுதும் நம்பிக்கை இருந்து கொண்டுதான் இருக்கின்றது . ஏன் என்று பார்த்தால் வறுமையில் உள்ள பெரும்பாலான மக்கள் அரசாங்கம் தான் தங்களை காப்பாற்றும் என்று நம்பியுள்ளனர் .


இந்தியாவை பொறுத்த வரை எவ்வித மக்களாக இருந்தாலும் சரி ஒன்று அரசாங்கத்தை நம்புவர்கள் இல்லை என்றால் கடவுளை நம்புவர்கள் . அப்படி என்ன நம்நாட்டில் மக்கள் அரசாங்கத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால் முன்னாள் ஆட்சியாளர்களின் மீது இருத்த வெறுப்புதான் .


ஆனால் இணையதில் இந்தியா தான் முதல் இடம் என்று கூறி சிலர் தவறான செய்தியை கூறியுள்ளனர் . OECD  அறிக்கையின் படி இந்தியா மூன்றாம் இடத்தை தான் பிடித்துள்ளது. மேலும்  ஆதாரமாக கொடுக்கப்பட படத்தை பார்த்தாலே தெரிந்து விடும் . நல்லாட்சி அமைந்தால் தான் மக்களின் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க