YouTurn

அதிகரிக்கும் செல்ஃபி விபத்து! இளைஞர் மரணமா ?

அதிகரிக்கும் செல்ஃபி விபத்து! இளைஞர் மரணமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இரயிலில் மோதி தூக்கி எறிவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியது. மேலும், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாகவும் செய்திகள் பரவின. ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயதான சிவா என்ற...

பரவிய செய்தி

21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இரயிலில் மோதி உயிரிழந்தார்.

விரிவான விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற போது இரயிலில் மோதி தூக்கி எறிவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியது. மேலும், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாகவும் செய்திகள் பரவின.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயதான சிவா என்ற இளைஞர் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். செல்ஃபி புகைப்படங்களின் மோகத்தால் போரபந்தா இரயில் நிலையத்திற்கு அருகே, தண்டவாளத்தில் வரும் இரயில் முன்பு செல்ஃபி எடுக்க திட்டமிட்டுள்ளார். இரயில் மிக அருகில் வரும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்வதைக் கூட ஏற்காமல், ஒரு நிமிடம் என்று கூறி தண்டவாளத்திற்கு மிக அருகில் தயாராக நின்றுள்ளார். 



அச்சமயத்தில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த இரயில், இளைஞர் மீது மோதியதால் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினரின் விசாரனைக்கு பிறகு இளைஞரின் மீது ரயில்வே சட்டம் 1989-ன் படி 147-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் இளைஞர் சிவா நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.500  அபராத தொகையாக செலுத்தினார். 21 நிமிடம் எடுக்கப்பட்ட அந்த செல்ஃபி வீடியோ ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் 1000 கணக்கில் ஷேர் செய்யப்பட்டது. விரைவாக வரும் இரயிலின் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.



அமெரிக்காவைச் சேர்ந்த கார்னெகி மெல்லோன் பல்கலைக்கழகத்தின் PhD மாணவர் ஹெமன்க் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில், 2014 செப்டம்பர் முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் மட்டும் உலகம் முழுவதும் செல்ஃபி மோகத்தால் 127 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 76 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை மற்றும் இவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலும் இளைஞர்களையே என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டும் கர்நாடகாவில் இதே போன்று இரயில் முன்பு செல்ஃபி எடுக்க மூன்று இளைஞர்கள் முயன்றுள்ளனர், செல்ஃபியால் டெல்லியில் இரண்டு இளைஞர்கள் இரயில் மோதி இறந்துள்ளனர்.

சுருக்கமாக

செல்ஃபி மோகத்தால் வேகமாக வரும் இரயிலுக்கு மிக அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்த இளைஞர், தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க