YouTurn

தேசிய மொழி இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்ற சேவை ஊழியர்.. மன்னிப்பு கோரிய சோமேட்டோ !

தேசிய மொழி இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்ற சேவை ஊழியர்.. மன்னிப்பு கோரிய சோமேட்டோ !
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி திணிப்பு எந்த வகையில் வந்தாலும் அதற்கு கடும் எதிர்ப்பு இன்றளவும் இருக்கவே செய்கிறது. இந்தியாவிற்கு என்று ஒரேயொரு தேசிய மொழி இருப்பதாக அரசியலமைப்பு சட்டம் கூறவில்லை. இந்தி நம் நாட்டின் அலுவல் மொழியே தவிர தேசிய மொழி இல்லை, இது பலருக்கும் தெரிவதுமில்லை. அப்படியொரு சம்பவத்தால் கடும் எதிர்ப்பை சந்தித்த சோமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாத காரணத்தினால் சோமேட்டோ சாட் பாக்சில் முறையீடு செய்து இருக்கிறார். டெலிவரி செய்யப்படாத உணவிற்கு ரீபண்ட் கேட்டு பேசிக் கொண்டிருக்கையில், உரையாடலில் தகவலை பகிர மொழி பிரச்சனை இருப்பதாக ஊழியர் கூறவே, தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என விகாஷ் கூறி இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த சோமேட்டோ ஊழியர், இந்தி இந்தியாவின் தேசிய மொழி. குறைந்தபட்சமாவது அனைவரும் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். சோமேட்டோ சாட் பாக்சில் நடந்த உரையாடலை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து  ட்விட்டரில் சோமேட்டோ நிறுவனத்தை டக் செய்து விகாஷ் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link 

அவருடைய ட்வீட் வைரலாகவே, #Reject_Zomato எனும் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியது. இதனால் சோமேட்டோ நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில், சேவை ஊழியரின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்டதோடு, அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் சோமேட்டோ ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.



Twitter link 

அதில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும், கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை