சோமேட்டோ ஊழியர் பிரச்சனையில் நெட்டிசன்கள் விடுக்கும் கோரிக்கை!

உணவு டெலிவரி செய்ய வந்த சோமேட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாகக் கூறி காயங்களுடன் இளம்பெண் ஒருவர் பதிவேற்றிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது
அந்தக் காணொளியில் மூக்கில் இரத்தக் காயத்துடன் பேசிய ஹிட்டேஷா சந்திரனே "எனது சோமேட்டோ ஆர்டர் தாமதமானது, எனவே நான் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருந்தேன், அப்போது திடீரென்று என்னை அடித்துவிட்டு ஓடிவிட்டார்", எனவும் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

Twitter link
இந்தக் காணொளி வைரல் ஆனது, இதனைத்தொடர்ந்து ஹிட்டேஷா சந்திரனே அன்றைக்கு நடந்ததை விளக்கும் விதமாக மற்றொரு காணொளி ஒன்றை பதிவிட்டார்.
அதன்படி, கடந்த 9 ஆம் தேதி ஹிட்டேஷா சந்திரனே சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். உணவு வர தாமதம் ஆக அந்த ஆர்டரை ரத்து செய்யுமாறு கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு ஆர்டர் செய்த உணவோடு டெலிவரி நபர் வந்துள்ளபோது அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் தன்னை தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறினார்.
மறுநாள் இச்சம்பவம் தொடர்பாக டெலிவரி செய்த நபரின் கருத்தைக் கேட்க பல ஊடகங்கள் அவரை தொடர்பு கொண்டனர். இதனிடையில், அந்த வீடியோ வைரலாகவே சோமேட்டோ நிறுவனம் டெலிவரி செய்யச் சென்ற காமராஜை இடைக்கால பணிநீக்கம் செய்தது.
NDTVக்கு அவர் அளித்த பேட்டியில், ஹிட்டேஷா சந்திரனேதான் தன்னை முதலில் தகாத வார்தையினால் திட்டினார் எனவும் காலணியை தூக்கி அடித்தார் எனவும் புகார் அளித்தார். தான் அவரை அடிக்கவில்லை என்றும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததாக அவர் கூறிய புகாரையும் காமராஜ் மறுத்தார்.
https://youtu.be/e6WXFyOw2o8
மேலும் அவர் கூறியதாவது , " நான் அவரின் வீட்டை அடைந்ததும் அவரிடம் உணவை ஒப்படைத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற காத்திருந்தேன். டெலிவரி செய்ய கால தாமதமானதால் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே கறாராக பேசினார். நான் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் கால தாமதம் ஆகிவிட்டது என கூறியும் 45-50 நிமிடங்களுக்குள் ஆர்டரை வழங்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அவர் உணவுக்கு பணம் கொடுக்காமல், சோமேட்டோ கஸ்டமர் கேருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் என் பணத்தை இழந்துவிடுவென் என்று பயந்து, ஆர்டருக்கு பணம் செலுத்தும்படி அவரிடம் கேட்டேன். அந்த சமயத்தில் அவர் என்னை 'அடிமை' என்று கூறினார். சோமேட்டோ சேவை மையம் என்னை தொடர்பு கொண்டு ஹிட்டேஷா சந்திரனேவின் ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டதாகக் கூறினார். அதனால் நான் அவரிடம் டெலிவரி பார்சலை திரும்பக் கேட்டேன் அதற்கு அவர் உடன்படவில்லை. நான் பார்சலை அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்தேன் அவர் என்னை ஹிந்தியில் தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டே என்னைத் தாக்கினார். நான் என்னை தற்காத்துக்கொள்ள என் கைகளை தடுப்பாக பயன்படுத்தினேன் அவர் என் கையை விலக்க முயன்றபோது, தற்செயலாக அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் அவர் மூக்கில்பட்டது" என்றார்.
Twitter link
இதையடுத்து, சோமேடோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தேர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், " இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் நெறிமுறையின்படி, காமராஜை பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை வழங்கவும், வழக்கு தொடர்பான அவரது சட்ட செலவுகளையும் சோமேட்டோ நிறுவனமே பார்த்துக் கொள்வதாகவும் "கூறியுள்ளார்.
மேலும், "காமராஜ் சோமேட்டோ நிறுவனத்திற்காக 26 மாதங்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், 5000 டெலிவரி செய்து 4.75/5 ரேட்டிங் பெற்றுள்ளதாகவும் அது மிக உயர்ந்த ரேட்டிங் என்றும் " குறிப்பிட்டிருக்கிறார்.

சோமேட்டோ நிறுவனம் காமராஜ் மற்றும் ஹிட்டேஷாவின் மருத்துவ செலவை ஏற்பதாகக் கூறியுள்ளது. சிசிடிவி கேமரா காட்சி இல்லாததால் புகாரின் உண்மைத்தன்மை என்னவென்று தெரியாத நிலையில் சமூக வலைதளவாசிகள் இச்சம்பவத்தை விசாரிக்க கோரியும், காமராஜுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக #justiceforkamaraj என்னும் ஹாஷ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

I want to chime in about the incident that happened in Bengaluru a few days ago. @zomato pic.twitter.com/8mM9prpMsx
— Deepinder Goyal (@deepigoyal) March 12, 2021
Twitter link
இதையடுத்து, சோமேடோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தேர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், " இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் நெறிமுறையின்படி, காமராஜை பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை வழங்கவும், வழக்கு தொடர்பான அவரது சட்ட செலவுகளையும் சோமேட்டோ நிறுவனமே பார்த்துக் கொள்வதாகவும் "கூறியுள்ளார்.
மேலும், "காமராஜ் சோமேட்டோ நிறுவனத்திற்காக 26 மாதங்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், 5000 டெலிவரி செய்து 4.75/5 ரேட்டிங் பெற்றுள்ளதாகவும் அது மிக உயர்ந்த ரேட்டிங் என்றும் " குறிப்பிட்டிருக்கிறார்.

சோமேட்டோ நிறுவனம் காமராஜ் மற்றும் ஹிட்டேஷாவின் மருத்துவ செலவை ஏற்பதாகக் கூறியுள்ளது. சிசிடிவி கேமரா காட்சி இல்லாததால் புகாரின் உண்மைத்தன்மை என்னவென்று தெரியாத நிலையில் சமூக வலைதளவாசிகள் இச்சம்பவத்தை விசாரிக்க கோரியும், காமராஜுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக #justiceforkamaraj என்னும் ஹாஷ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
- அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)