YouTurn

பிரைவசி விவகாரம் எதிரொலியால் வாட்ஸ்அப் அளித்த விளக்கங்கள் !

பிரைவசி விவகாரம் எதிரொலியால் வாட்ஸ்அப் அளித்த விளக்கங்கள் !
அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்கள் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்கள் வரை அனைவராலும் அதிகமாக விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை.

சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை மாற்றி உள்ளதாகவும், அதை பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் பயனர்கள் ஆமோதித்தால் தான் தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும் என்ற செய்தி பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மை என்ற போதும் இதன் நீட்சியாக இதை தொடர்ந்து வந்த பல செய்திகளில் இந்த தனியுரிமைக் கொள்கையில் இல்லாத சிலவற்றையும் மிகைப்படுத்தியும் கூறி அது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

டெஸ்லா தலைவர் எலன் மஸ்க் தொடங்கி பிரபல ஹேக்கர் எலியட் அல்டெர்சன் வரை வாட்ஸ்அப்க்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த பரிந்துரை செய்ததை தொடர்ந்து இந்திய போன்ற பல நாடுகளில் அனைவரும் சிக்னல் செயலியை தரவிறக்கம் செய்ய தொடங்கி விட்டனர்.

ஆனால் செய்தியில் கூறிய மற்றும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தையும் நம்ப வேண்டாம் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை சிறிது மாறுதலுக்கு உட்பட்டு மீண்டும் வெளியிட்டு உள்ளது. அவற்றை காணலாம்.

கேள்வி 1: வாட்ஸ்அப் எனது பயனாளர்கள் ஒருவர்க்கு ஒருவர் பேசிக்கொள்ளும் செய்தி தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறதா ?

பதில் : இல்லை.



கேள்வி 2: வாட்ஸ்அப் எனது ஆடியோ / வீடியோ அழைப்புகளைப் பதிவுசெய்து கண்காணிக்குமா?

பதில்: இல்லை.

கேள்வி 3: வாட்ஸ்அப் எனது இருப்பிடத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறதா ?

பதில்: தோராயமான இருப்பிட தகவல் மட்டுமே பகிரப்படும்.



கேள்வி 4: வாட்ஸ்அப் விளம்பரங்களைக் காண்பிக்குமா ?

பதில்: இப்போது இல்லை. ஆனால், சில மூன்றாம் நபர்களுக்கு உங்கள் எண் பகிரும் போது குறுஞ்செய்தி அல்லாமல் வாட்ஸ்அப் வாயிலாக சில தகவல்களை தொடர்புகொள்வார்.



கேள்வி 5: வாட்ஸ்அப் எனது பயன்பாட்டில் நான் பகிர்ந்த புகைப்படங்கள், மீடியா கோப்புகளை அதன் சர்வரில் வைத்திருக்கிறதா ?

பதில்: இல்லை. ஆனால், பெறுநர் உங்கள் செய்தியை பெறவில்லை என்றால் மட்டுமே அது அவரிடம் சேரும் வரை 30 நாள் என்க்ரிப்ட் செய்து வைக்கப்படும், பின்னர் தானாக அழிந்துவிடும்.



கூடுதல் தகவல்:

வாட்ஸாப் தனது பயனாளரின் எண், ப்ரொபைல் புகைப்படம், எபோட் தகவல், குழுவின் பெயர், புகைப்படம், அதில் உள்ள நண்பர்களின் எண், அவர்கள் மற்றும் நீங்கள் பகிரும் லிங்க்ஸ், பண பரிவர்த்தனைகள், உங்களின் கைபேசி மாடல், சிக்னல் மேலும் மூன்றாம் நபர்களுக்கு நீங்கள் அளிக்கும் மின்-அஞ்சல் முகவரி, எண் சிலவற்றையும் தானியங்கி செயலி வாயிலாக சேமித்து பின் அதை முகப்புத்தகம் மற்றும் பிற மூன்றாம் நபர்களுக்கு கணக்கெடுப்பு மற்றும் இதர காரணிகளுக்காக தரலாம்.



Links :

WhatsApp Privacy Policy

Answering your questions about WhatsApp’s Privacy Policy
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை