YouTurn

விஜிபி-யின் "சிலை மனிதர்" கொரோனாவால் மரணம் என வதந்தி !

விஜிபி-யின் "சிலை மனிதர்" கொரோனாவால் மரணம் என வதந்தி !
சென்னை விஜிபி தங்கக்கடற்கரை ரெசார்ட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக " சிலை மனிதனாக" பணியாற்றி வரும் 60 வயதான தாஸ் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் பரவத் தொடங்கின.



சில தமிழ் மற்றும் ஆங்கில செய்தி இணையதளங்கள் கூட விஜிபி-யின் சிலை மனிதர் இறந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் சமூக வலைதளங்களில் கூட சிலை மனிதர் இறந்து விட்டதாக எண்ணி அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். ஆனால், விஜிபி-யின் சிலை மனிதர் கொரோனா வைரசால் இறந்து விட்டதாகப் பரவும் தகவல் வதந்தியே.




Instagram link | archive link 

" நான் விஜிபி-யில் சிலை மனிதனாக வேலை பார்க்கிறேன். தற்போது நான் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். விஜிபி மறுபடியும் திறந்த பிறகு என்னை நீங்கள் காணலாம் " என தாஸ் பேசிய வீடியோ விஜிபி-யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை