YouTurn

முந்திக்கொண்ட பாகிஸ்தான் - வாய்ப்பை தவறவிட்ட ஒன்றிய பாஜக அரசு! அமெரிக்கா-இஸ்ரேல் VS ஈரான் போர் நிறுத்தத்தின் பின்னணி!

ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்திருந்த கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களே மீதமிருந்த நிலையில், தற்போது ஈரானுடன் 2 வாரங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்ப்.

முந்திக்கொண்ட பாகிஸ்தான் - வாய்ப்பை தவறவிட்ட ஒன்றிய பாஜக அரசு!  அமெரிக்கா-இஸ்ரேல் VS ஈரான் போர் நிறுத்தத்தின் பின்னணி!

இரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வந்த தாக்குதல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரபு நாடுகள், அமெரிக்கா மட்டுமின்றி மொத்த உலகமுமே பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. போர் நடக்கும் நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் கொல்லப்பட்டு வரும்  சூழலில், மற்ற நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இன்னும் கேஸ் சிலிண்டர் பிரச்சனை தீவிரமடைந்துகொண்டே செல்கிறது.

 

இரு தரப்புடனும் நட்பு பாராட்டி வரும் நாடுகள் மத்தியஸ்தம் செய்து இந்த போரை நிறுத்த முனைப்பு காட்ட வேண்டும் என்பது மனித உரிமை அமைப்புகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது இந்தியாவின் பங்களிப்பைத்தான். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என மூன்று நாடுகளுடனும் நல்ல ஒரு உறவை கடைபிடித்து வருவதாக வெளியுறவுத்துறை கூறிக்கொண்டிருந்தது.

 

ஆனால், போர் தொடங்கி ஈரானின் பெண் குழந்தைகள் பயிலும் பள்ளி மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கொடூரமான ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை கண்டிக்க தாமதம் காட்டிய ஒன்றிய அரசு, பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தொடர்ந்து ஆதரவளித்து வந்த ஈரானின் பதில் தாக்குதல்களை மட்டும் வேகமாக கண்டித்தது. இப்படி தொடக்கத்திலேயே ஒரு சார்பு நிலையை எடுத்து மத்தியஸ்தம் செய்வதற்கான தகுதியை ஒன்றிய வெளியுறவுத்துறை இழந்தது.

 

இந்த சூழலில் ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்திருந்த கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களே மீதமிருந்த நிலையில் தற்போது ஈரானுடன் 2 வாரங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.


 

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் இருதரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸும் பாகிஸ்தானின் இந்த போர் நிறுத்த முயற்சிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

 

இதன் தொடர்ச்சியாக இந்திய ஊடகங்கள் உட்பட சர்வதேச ஊடகங்களில் “Pakistan Peacemaker” என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

 

பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பேசி வரும் ஒன்றிய பாஜக அரசு, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அஞ்சி நடுநிலைமை தவறி மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பை பாகிஸ்தானிடம் இழந்து நிற்கிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை