YouTurn

உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி என அறிவிப்பு !

உன்னாவ் மாவட்டத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 2017-ல் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தி இன்றுவரை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பெண் பயணித்த வாகனமும் விபத்துக்குளாகியதில் உடன் பயணித்த இரு...

உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி என அறிவிப்பு !
உன்னாவ் மாவட்டத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 2017-ல் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தி இன்றுவரை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பெண் பயணித்த வாகனமும் விபத்துக்குளாகியதில் உடன் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் படுகாயம் அடைந்தார்.



இந்நிலையில், முன்னாள் பாஜக எம்எல்ஏ மீது நடைபெற்று வந்த மைனர் பெண்ணை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. மேலும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வருகிற 19-ம் தேதி நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த சசி சிங் என்பவரை நீதிமன்றம் விடுவித்து உள்ளது.

குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் மீது தொடர்ந்த வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு செல்லும் பொழுது 5 பேர் கொண்ட கும்பலால் எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதையடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாவட்டமாக உன்னாவ் பகுதி இருப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பாஜகவின் எம்எல்ஏவாக இருந்த செங்கார் உன்னாவ் மாவட்டத்தின் பங்கேர்மாவ் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். இந்த வழக்கின் தீவிரத்தால் கட்சியில் இருந்து அவரை நீக்குவதாக பாஜக அறிவித்தது.

Proof links : 

Former BJP MLA Kuldeep Singh Sengar guilty of kidnapping and raping Unnao minor

ANI tweet 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை