திருச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் அமைச்சர் அன்பில் மகேஷ் ஓட்டுநர் அல்ல!
திருச்சி மாவட்டத்தில் சமீப காலமாக பாலியல் வன்முறை வழக்குகள் பல வெளிவந்தன அவற்றை மறைப்பதற்காகவே மகாவிஷ்ணுவை கைது செய்து அதனை பெரிய பிரச்சனையாக திமுக அரசு மாற்றுகிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினர் வலதுசாரிகள்.
சமீபத்தில் சொற்பொழிவாளர் என்ற பெயரில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மதபோதனை செய்ததற்காகவும் அதனை எதிர்த்து கேள்விகேட்ட ஆசிரியரை தரக்குறைவாக பேசியதற்காகவும் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல வலதுசாரி ஆதரவாளர்கள் மகாவிஷ்ணுவின் கைதுக்கு பின்னே அரசியல் காரணம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு ஒன்றை எழுதிவருகின்றனர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிறுத்தி வைத்திருக்கும் நிதி குறித்த பிரச்சனையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெரிதாக்குவதும் சமீபத்தில் வெளிவரும் பாலியல் குற்றச்சாட்டுகளை திசைத்திருப்புவதற்குதான் என்றும் பல வலதுசாரிகள் செய்தி ஒன்றை பரப்பி வருகிறார்கள்.
Another diversionary tactic from CM himself.
Tamilnadu CM is trying hard to divert public attention from School Education Minister and his misdeeds.
School Education minister’s @Anbil_Mahesh driver and their friends sexually abused a college girl, took video of that crime,… https://t.co/zC8aFB9MHc
திருச்சி மாவட்டத்தில் சமீப காலமாக பாலியல் வன்முறை வழக்குகள் பல வெளிவந்தன அவற்றை மறைப்பதற்காகவே மகாவிஷ்ணுவை கைது செய்து அதனை பெரிய பிரச்சனையாக திமுக அரசு மாற்றுகிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
திருச்சியில் அமைச்சர் @Anbil_Mahesh அவர்களின் டிரைவர் செய்த கூட்டு பாலியல் வன்முறையை மறைக்கவே மஹாவிஷ்ணு கைது.
திருச்சி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு பாலியல்…
மேலும், குறிப்பாக திருச்சி ITI மாணவி பாலியல் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் ஓட்டுநராக இருப்பதால்தான் இந்த விவகாரத்தை அரசு மறைக்கப்பார்க்கிறது என பாஜகவை சேர்ந்த செல்வக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மாரிதாஸும் இதே போன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். Dear @Anbil_Mahesh உங்களிடம் டிரைவராக இருக்கேன்னு உங்க பெயரைச் சொல்லி ஒரு பெண்ணை கற்பழித்து சீரழிச்சிருக்கான், இவனை என்ன பண்ண போறீங்க அமைச்சரே ?! மகாவிஷ்னுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிகொடுத்த மாதிரி இவனுக்கும் தண்டனை வாங்கி கொடுப்பிங்களா?!
pic.twitter.com/s4oXMta80E
எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத்தன்மையை ஆராய திருச்சி மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.
“சிலம்பரசன் என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஓட்டுநர் அல்ல. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பெண் அணுகிய அன்றே FIR பதிவு செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின்கீழ் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவிட்டோம்.
என்.ஐ.டி. விவகாரத்திலும் உடனடியாக FIR பதிவுசெய்யப்பட்டு நேர விரயமற்று குற்றவாளியை சிறையில் அடைத்தோம். சாம்சன் டேனியல் வழக்கு திருச்சி மாநகர காவல்துறைக்கு கீழே வரும் வழக்கு. குற்றவாளியும் அவரது தாயும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் எவையும் மறைக்கப்படவில்லை. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்துள்ளோம்.” என்று வருண்குமார் ஐ.பி.எஸ் விளக்கமளித்தார்.
இதுகுறித்த கூடுதல் தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் அதனையும் இக்கட்டுரையில் சேர்ப்போம்.