YouTurn

இணைய சேவை தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்காக TRAI வெளியிட்டுள்ளது புதிய அறிவிப்பு!

இணைய சேவைக்கான (Internet Data) தரவுக் கட்டணத்தை தவிர்த்துவிட்டு, Voice Call மற்றும் Message ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கிய கட்டணத்தை தேர்வு செய்து, வாடிக்கையாளர்கள் தங்களது செலவை குறைத்துக் கொள்ளலாம்.

இணைய சேவை தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்காக TRAI  வெளியிட்டுள்ளது புதிய அறிவிப்பு!

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் படி, ‘இணைய சேவைக்கான (Internet Data) கட்டணத்தை தவிர்த்துவிட்டு, அலைபேசியில் Voice Call மற்றும் Message ஆகிய சேவைகளுக்கு மட்டும் தனியாக கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்தப் போவதாக’ அறிவித்துள்ளது. இதன்மூலம், இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் recharge செய்யும்போது Voice Call மற்றும் Message ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கிய கட்டணத்தை (Tariff Packs) தேர்வு செய்து, தங்களது செலவை குறைத்துக் கொள்ளலாம்.



இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், Voice Call மற்றும் Message மட்டும் உள்ளடக்கிய இந்த கட்டணமுறையை இன்னும் 30 நாட்களுக்குள் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று TRAI ஆணை பிறப்பித்துள்ளது. 


ஆனால், இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களையும் இணைய பயன்பாட்டிற்குள் கொண்டுவந்து, தங்களது சந்தையை பெருக்கிக்கொள்ள இலக்கு வைத்திருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் TRAI வெளியிட்டுள்ள இந்த ஆணையை எதிர்க்கின்றன


இந்திய தொலை தொடர்பு சந்தையில் முன்னணியில் இருக்கும் Reliance Jio நிறுவனம், 2G தொழில்நுட்பத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கடந்த நான்காண்டுகளாக கோரி வருகிறது. மின்னணு புரட்சியால் உண்டாகும் பயனை முழுமையாக அடைவதற்கு 2G தொழில்நுட்பம் தடையாக இருப்பதாக Jio கூறுகிறது.



”5G தொழில்நுட்பத்திற்கு விரைவாக மாறிச்செல்வதன் மூலமாக கனிசமான அளவு 4G திறன் சந்தைப் பயன்பாட்டிற்கு வரும், இதன்மூலமாக 2G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் பெருமளவிலான வாடிக்கையாளர்களை 4G நோக்கி ஈர்க்கமுடியும்” என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி கூறுகிறார்.


Jio, Airtel, VI ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2Gல் இருந்து 4G தொழில்நுட்பத்திற்கு மாறிச் செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 


இந்நிலையில் TRAI வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அதாவது வாடிக்கையாளர்கள் இணைய சேவையை தவிர்த்துவிட்டு  Voice Call மற்றும் Message சேவைக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் திட்டம், அடிப்படையில் இந்தியாவில் 4G தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்து அதன் மூலம் ’பயனர் மூலமாக கிடைக்கும் சராசரி வருவாயை (ARPU)’ அதிகப்படுத்திக் கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டத்திற்கு எதிரானதாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. 


TRAI இதற்கு தெளிவாக விளக்கமளித்துள்ளது. இணைய சேவையை தவிர்த்துவிட்டு Voice Call மற்றும் Message சேவைக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் முறைக்கு இணையாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த முறைகளான Bundled offers ( Voice, Call Message, Data ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தொகுப்பு), Data-only (இணைய சேவைக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் முறை) ஆகியவையும் நடைமுறையில் இருக்கும். இதனால், மக்களை இணைய பயன்பாட்டை நோக்கி ஈர்க்கும் திட்டத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படாது என்று விளக்கமளித்துள்ளது.


பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ‘இந்தியாவில் 15 கோடி வாடிக்கையாளர்கள் இன்னும் Feature Phones என்று சொல்லப்படகூடிய Smart Phone அல்லாத Button Phone-களைத் தான் பயன்படுத்துகிறார்கள்’ என்ற TRAI மதிப்பிடுகிறது. இதனால், இத்தகைய வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப தொலைத்தொடர்பு சேவையை தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த திட்டம் வாய்ப்பு வழக்குவதாக TRAI தெரிவிக்கிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை