YouTurn

ஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.

இந்தியாவில் நோவல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய தருணத்தில் மார்ச் 22-ம் தேதி ஒருநாள் மட்டும் மக்கள் அனைவரும் சுயஊரடங்கு முறையை கடைபிடிக்குமாறு பிரதமர் தெரிவித்தார். பின்னர் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாலையில் மருத்துவ பணியாளர்கள், கொரோனாவிற்கு எதிராக போராடும் மக்களின் சேவையை பாராட்டி கைகளை தட்டி...

ஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.
இந்தியாவில் நோவல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய தருணத்தில் மார்ச் 22-ம் தேதி ஒருநாள் மட்டும் மக்கள் அனைவரும் சுயஊரடங்கு முறையை கடைபிடிக்குமாறு பிரதமர் தெரிவித்தார். பின்னர் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாலையில் மருத்துவ பணியாளர்கள், கொரோனாவிற்கு எதிராக போராடும் மக்களின் சேவையை பாராட்டி கைகளை தட்டி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சில இடங்களில் அதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாய் சத்தத்தை ஏற்படுத்தி சமூக இடைவெளியை சீர்குலைத்தனர்.

தற்போது ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு நிலை தொடரும் தருணத்தில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து மின் விளக்குகளையும் அனைத்து விட்டு அகல் விளக்குகள், செல்போன், டார்ச்லைட், மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். இதன் மூலம் நாம் அனைவரும் தனியாக இல்லை ஒற்றுமையாக உள்ளோம் எனத் தெரிவியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், மக்கள் வீட்டிற்கு வெளியே கூட்டமாய் கூடாமல் இருக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, கடந்த முறை நடந்தது போன்று இம்முறை தவறுகள் நடந்து விடாமல் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9.00 முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை அணைப்பது தொடர்பாக தமிழக மின்சார வாரியத்தின் தரப்பில் இருந்து ஓர் அறிவுரை வெளியாகி இருக்கிறது. அதன்படி, " மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம். ஒரே நேரத்தில் அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்சனை ஏற்படும். எனவே மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் " எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக மின்சாதனங்களை அணைத்து மீண்டும் ஆன் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க மின்சார வாரியம் தெரிவித்த அறிவுரையை பின்பற்ற வேண்டும், கூடுதலாக சமூக இடைவெளியை மீறாமல் இருக்க வேண்டும்.

பின்குறிப்பு : ஆர்வக்கோளாறில் மீட்டர் பாக்சில் கை வைக்க வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை