YouTurn

பயங்கரவாத தாக்குதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது !

இலங்கை குண்டு வெடிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ உள்ளதாகவும், அது குறித்து வந்த தகவலை பெங்களூர் காவல்துறை தமிழக காவல்துறைக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்து உள்ளதாக கடிதம் ஒன்று வைரல் ஆகியது. தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடைந்தும்...

பயங்கரவாத தாக்குதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது !
இலங்கை குண்டு வெடிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ உள்ளதாகவும், அது குறித்து வந்த தகவலை பெங்களூர் காவல்துறை தமிழக காவல்துறைக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்து உள்ளதாக கடிதம் ஒன்று வைரல் ஆகியது.

தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடைந்தும் வருகிறன்றனர்..

இந்நிலையில், பெங்களூர் காவல்துறைக்கு தவறான தகவல் அளித்த நபரை காவல்துறை கைது செய்து உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அவரின் பெயர் சுந்தர மூர்த்தி என்றும், முன்னாள் ராணுவ வீரர் தற்போது லாரி ஓட்டுனராக உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது..

இவர் பெங்களூர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி  உள்ளிட்ட பல மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடக்க உள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்..

காவல்துறையின் விசாரணைக்கு பிறகு முழு தகவல் தெரிய வரும். மக்கள் அச்சம் அடைய வேண்டாம் வதந்திகளை நம்ப வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை