YouTurn

20 ரூபாய் டீ-க்கு 50ரூ சேவை கட்டணம் என வைரலாகும் பில்.. ஐஆர்சிடிசி கூறுவதென்ன ?

20 ரூபாய் டீ-க்கு 50ரூ சேவை கட்டணம் என வைரலாகும் பில்.. ஐஆர்சிடிசி கூறுவதென்ன ?
போபால் சதாப்தி இரயிலில் பயணித்த பயணி ஒருவர் அருந்திய 20 ரூபாய் டீ-க்காக 50 ரூபாய் சேவை கட்டணம் என மொத்தம் 70 ரூபாய் செலுத்தியதாக ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







ஜூன் 28-ம் தேதி டெல்லி - போபால் வழித்தடத்தில் இயங்கும் சதாப்தி இரயிலில் பயணித்த பயணி ஒருவர் காலை நேரத்தில் டீ ஆர்டர் செய்துள்ளார். ஒரு டீ-க்கு சேவை கட்டணம் 50 ரூபாய் வசூலித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துடன் பகிரப்பட்டு வருகிறது.



2018-ல் இந்திய இரயில்வே நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " ராஜஸ்தானி, சதாப்தி, துரொண்டோ போன்ற விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முன்பே ரிசர்வேசன் போது உணவை முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது ஆர்டர் செய்யப்படும் உணவிற்கு கூடுதல் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும் " எனக் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானி, சதாப்தி, துரொண்டோ போன்ற இரயில்களில் டிக்கெட் முன்பதிவின் போதே உணவுக்கான விருப்பதை தேர்வு செய்து பயணம் செலுத்தாமல் பயணத்தின் போது இரயில்வே கேட்டரிங்கில் ஆர்டர் செய்யும் உணவிற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வைரல் செய்யப்படும் ரசீதும் சதாப்தி இரயிலில் வழங்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. எதுவாகினும், ஒரு டீ-க்கு 50ரூபாய் சேவை கட்டணம் வசூல் செய்தது விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை