YouTurn

கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் - டாடா ஸ்டீல் !

கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் - டாடா ஸ்டீல் !
டாடா குழுமத்தின் டாடா ஸ்டீல் நிறுவனம் கொரோனா தொற்றால் உயிர் இழந்த தன் ஊழியர்களின் குடும்பத்திற்கு, அந்த ஊழியர்களின் 60 வயதை எட்டும் வரை கடைசியாக அவர்களுக்கு வரையப்பட்ட சம்பளத்தை வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

டாடா குழுமத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும், இதில் ஊதியம் மட்டும் அல்லாமல் மருத்துவ சேவைகளும் அடங்கும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்து அதற்கான செய்தி அறிக்கையை வெளியிட்டது.



Twitter link 

அதில், "டாடா ஸ்டீல் இந்த பயங்கரமான தொற்றுநோய்களின் போது தனது அன்புக்குரிய ஊழியர்களின் சோகமான மறைவில் ஆழ்ந்த இழப்பு உணர்வுடன் ஒன்றாக நிற்கிறது. ஒரு அழகான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மறைந்த எங்கள் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு கெளரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த டாடா ஸ்டீலின் சிறந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் தன் ஊழியர்கள் 60 வயதை எட்டும் வரை கடைசியாக அவர்களுக்கு வரையப்பட்ட சம்பளத்தை வழங்க உள்ளது, இதில் மருத்துவ சலுகைகளும் ,வீட்டு வசதிகளும் அடங்கும்."

"மேலும், பெருந்தொற்றின் காரணமாக தங்கள் வேலையின் போது துரதிர்ஷ்டவசமான மரணத்தை சந்தித்த அனைத்து முன்கள ஊழியர்களுக்கும், தனது அன்புக்குரிய ஊழியர்களின் குழந்தைகளின் பட்டப் படிப்பு முடிக்கும் வரை அவர்களின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்" என அறிவித்து உள்ளது

"டாடா நிறுவனம் எல்லா நேரங்களிலும் அதன் பங்குதாரர்களை ஆதரிக்கிறது. இந்த நேரமும் வேறுபட்டதல்ல. டாடா ஸ்டீல் குடும்பம் தன் அனைத்து மக்களுடனும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு உறுதியுடன் நிற்கிறது" என செய்தி அறிக்கையை வெளியிட்டது.

இந்தியாவில் எந்த ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களும் முன்னெடுக்காத, ஒரு அவசியமான முன்னெடுப்பை டாடா குழுமம் முன்னெடுத்து இருக்கிறது. மற்ற கார்ப்ரேட் நிறுவனங்கள் தன் ஊழியர்களின் மீதான அக்கறையை இது போன்ற திட்டங்கள் மூலம் வெளிக்கொணர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை என்பதில் ஐயமில்லை.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை