YouTurn

மது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விநியோகம்.. வைரலாகும் புகைப்படம் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மது விற்பனை 170 கோடி வசூல் செய்ததாகவும், ஒரே நாளில் 20 லட்சம் லிட்டர் மது விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் கொரோனா வைரஸ், சமூக...

மது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விநியோகம்.. வைரலாகும் புகைப்படம் !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மது விற்பனை 170 கோடி வசூல் செய்ததாகவும், ஒரே நாளில் 20 லட்சம் லிட்டர் மது விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் கொரோனா வைரஸ், சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அலை மோதிக் கொண்டு மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவற்றிற்கெல்லாம் உச்சமாக, அரசு பள்ளியில் மது விற்பனை செய்ததாக மீம்ஸ் பதிவுகள் வைரலாகின. சில பதிவுகளில் மது பாட்டில்கள் வாங்க அரசு பள்ளியில் டோக்கன் வழங்கியதாக அதே புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அச்சம்பவம் அரங்கேறி உள்ளது. டாஸ்மாஸ் கடையில் மது பாட்டில்களை வாங்க 500 மீட்டர் தொலைவில் இருந்த அரசு பள்ளியில் காவல்துறை பாதுகாப்புடன் மது டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் டோக்கன் பெற்று போவதை படத்தில் காணலாம்.



இதை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், 300 டோக்கன்கள் வழங்கப்பட்ட பிறகே டோக்கன் விநியோகம் செய்வதை ஊழியர்கள் நிறுத்தி உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ ராமன், " சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் " எனத் தெரிவித்து உள்ளார்.

டோக்கன் வழங்கினால் என்ன, மது பாட்டில்கள் வழங்கினால் என்ன குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடத்தை மது விற்பனைக்காக பயன்படுத்தியது ஏற்கமுடியாத ஒன்றே. நேற்று ஒரு நாளில் மட்டும் 170 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. மது குடித்தவர்கள் செய்யும் அட்டகாசங்கள் கிண்டல்களாக செய்திகள், சமூக வலைதளங்களில் மட்டுமே வெளியாகிறது.

ஆனால், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் ஏற்படக்கூடிய உண்மையான விளைவை அறியாமல் அனைவரும் நகைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனை.

link : 

Tasmac queue tokens given out in govt school in Salem
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை