YouTurn

வாக்காளருக்கு முதல்வர் பழனிச்சாமி பணம் தருவதாக பரவிய வீடியோ!

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி பெண் ஒருவரிடம் பேசிய பிறகு கையில் பணத்தை கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சேலத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கச் சென்ற முதல்வர் மற்றும் அக்கட்சியினர் அங்கிருந்த பல கடைகளுக்கு...

வாக்காளருக்கு முதல்வர் பழனிச்சாமி பணம் தருவதாக பரவிய வீடியோ!
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி பெண் ஒருவரிடம் பேசிய பிறகு கையில் பணத்தை கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

சேலத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கச் சென்ற முதல்வர் மற்றும் அக்கட்சியினர் அங்கிருந்த பல கடைகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். அங்கு சந்தையில் இருந்த கடையில் பெண் ஒருவரிடம் நோட்டீஸ் கொடுத்து வணக்கம் கூறி பேசிக் கொண்டிருந்தார். பின் அருகில் இருந்தவரிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். இந்த காட்சி மட்டுமே சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.



தேர்தல் விதிகளின் படி பணம் கொடுப்பது குற்றமாகும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் வேட்பாளர் தகுதி நீக்கம்  செய்யப்படுவார். இந்நிலையில், முதல்வரே ஓட்டுக்கு காசுக் கொடுக்கிறார் என சமூக வலைதளங்கள் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் இருந்து முதல்வருக்கு எதிராக கேள்விகளும், கண்டனங்களும் எழுந்தது. ஆனால், இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.



வைரல் ஆன காட்சிகளுக்கு முன் நடந்தவை  அடங்கிய முழு வீடியோவில், அங்கிருந்த வாழைப்பழக் கடைக்கார பெண் முதல்வருக்கு வாழைப்பழம் சீப் கொடுத்துள்ளார், அதற்கான பணத்தையே தன் பாதுகாவலரிடம் இருந்து வாங்கி செல்லும் பொழுது கொடுத்து விட்டு சென்றுள்ளார் முதல்வர். ஆனால், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.



" வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்காமல் எப்படி வருவது. எனக்கு கொடுத்த வாழைப்பழத்திற்கு தான் பணம் கொடுத்தேன் " என முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை