YouTurn

திமுக 143, அதிமுக 50 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் - ADR அறிக்கை !

திமுக 143, அதிமுக 50  வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் - ADR அறிக்கை !
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களின் மீதான குற்ற வழக்குகள், சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை கட்சி வாரியாக ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு(ADR) வெளியிட்டு இருக்கிறது.

அறிக்கையின்படி, திமுகவின் 191 வேட்பாளர்களில் 143 பேர் மீதும், அதிமுகவின் 197 வேட்பாளர்களில் 50 பேர் மீதும், பாஜகவின் 319 வேட்பாளர்களில் 163 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் 239 வேட்பாளர்களில் 132 பேர் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியின் 23 வேட்பாளர்களில் 10 பேர் மீதும், தேமுதிகவின் 86 வேட்பாளர்களில் 20 பேர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 126 வேட்பாளர்களில் 77 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 35 பேரில் 14 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.



அவற்றில், திமுகவில் 55 பேர், அதிமுகவில் 21 பேர், பாஜகவில் 108 பேர், பாமகவில் 5 பேர், காங்கிரஸ் 82 பேர், தேமுதிக 10 பேர், சிபிஐ 3 பேர், சிபிஐ(எம்) 39 பேர் தீவிர குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 3,559 வேட்பாளர்களில் 466 பேர் மீது குற்ற வழக்குகளும், 207 பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மேலும், தமிழகத்தில் அமமுகவில் 29%, மக்கள் நீதி மய்யத்தில் 15%, நாம் தமிழர் கட்சியில் 14% வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தமிழக பாஜகவின் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில், 8 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

3,998  வேட்பாளர்களில் 3,559 வேட்பாளர்களின் வேட்புமனுவை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு பகுப்பாய்வு செய்து உள்ளது. திமுகவின் 10, நாம் தமிழர் கட்சியின் 30, மக்கள் நீதி மய்யத்தின் 23 , அமமுகவின் 59 வேட்பாளர்களின் வேட்புமனு விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்பதால் பகுப்பாய்வு செய்யவில்லை எனக் கூறி உள்ளனர்.

மேலும் படிக்க :  2 நிமிடத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களின் விவரங்களை அறியலாம் !


அறிக்கையின்படி, 3,559 வேட்பாளர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள். திமுகவில் 86% , அதிமுகவில் 85% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.


Links : 




பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை