எழும்பூர், சென்ட்ரல் விரைவு இரயில் டிக்கெட் வைத்திருப்பவர் புறநகர் ரயிலுக்கு தனியாக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை - தெற்கு ரயில்வே

தொலைதூர விரைவு இரயில்களில் வெளியூரிலிருந்து சென்னை வரும் பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட இரயில் நிலையத்திற்கு முன்பாக இறங்கி புறநகர் இரயிலுக்கு மாறும்போது அதற்குத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டாம்.
வெளியூர்களில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு விரைவு இரயில்கள் இயக்கப்படுகிறது. அதில் வருபவர்கள் விரைவு இரயில் நிற்காத இரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு முந்தைய இரயில் நிலையத்தில் இறங்கி, புறநகர் இரயில் மூலம் செல்ல வேண்டும்.
உதாரணமாகத் தென் மாவட்டத்தில் இருந்து வரும் பயணி ஒருவர் கிண்டிக்குச் செல்ல வேண்டுமெனில், தாம்பரத்தில் இறங்கி எழும்பூர் செல்லக்கூடிய புறநகர் இரயிலுக்கு மாற வேண்டும். இதே நிலைதான் அரக்கோணம் வழியாக சென்ட்ரல் வரும் பயணிகளுக்கும்.
அப்படி மாறுபவர்கள் புறநகர் இரயிலில் பயணிக்கத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, அப்பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் விதிக்கின்றனர். இது தொடர்பாக 2015ம் ஆண்டு பயணி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பதில் பெற்றுள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு செய்திகளும் வெளியாகியுள்ளது.
விரைவு இரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மூலம் பயணிக்கும் பயணி, தாம்பரத்தில் இறங்கி சென்னை எழும்பூர் வரை எந்த ரயில் நிலையத்திற்கும் புறநகர் இரயிலில் செல்லலாம். அதற்குத் தனியாக எந்த டிக்கெட்டும் எடுக்க வேண்டியது இல்லை. இது அரக்கோணம் வழித்தடத்திற்கும் பொருந்தும்.
ஏனெனில், மதுரையில் இருந்து ஒருவர் கிண்டிக்குச் செல்கிறார் என்றால் அவரிடம் கிண்டி வரைக்குமான டிக்கெட் கட்டணம் வசூலிப்பது இல்லை. ஏனென்றால் கிண்டியில் விரைவு ரயில் நிற்காது. எனவே அவர் எழும்பூர் வரை டிக்கெட் எடுக்கிறார். இதனால் அந்த முன்பதிவு டிக்கெட்டை கொண்டு அவர் புறநகர் இரயிலில் பயணிக்கலாம். ஆனால், தாம்பரம் வரை டிக்கெட் எடுத்து விட்டு அதற்கு அடுத்த இரயில் நிலையத்திற்கு செல்ல இயலாது.
இது தொடர்பாக 2017ம் ஆண்டும் தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “முன்பதிவு டிக்கெட் உட்பட உயர் வகுப்பு டிக்கெட் வைத்திருக்கும் அனைத்து பயணிகளும் தாம்பரம் - சென்னை எழும்பூர் மற்றும் அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அதே வழித்தடத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்” என்றுள்ளது.
இத்தகைய வழிமுறைகள் ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டு இருப்பினும் அவ்வாறு பயணம் செய்யும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் வசூலிக்கின்றனர். எனவே மேற்கண்ட தகவலைக் குறிப்பிட்டு தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் டிக்கெட் பரிசோதகர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இனி எவ்வித அச்சமும் இன்றி விரைவு இரயில் முன்பதிவு டிக்கெட்டை கொண்டு பயணிகள் தங்களுக்கான வழித்தடத்தில் புறநகர் இரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

Reserved ticket holders travelling by suburban trains pic.twitter.com/2yEW1cXDRY
— Southern Railway (@GMSRailway) February 22, 2017