YouTurn

உறைபனியில் ராணுவ வீரர்களுக்காக சோலார் கூடாரம்.. வைரலாகும் சோனம் வாங்சுக் கண்டுபிடிப்பு !

உறைபனியில் ராணுவ வீரர்களுக்காக சோலார் கூடாரம்.. வைரலாகும் சோனம் வாங்சுக் கண்டுபிடிப்பு !
கல்வான் பள்ளத்தாக்கில் உறைபனியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்காக சோலார் மிலிட்டரி டென்ட்களை சோனம் வாங்சுக் உருவாக்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் நன்றி தெரிவிக்கும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.



லடாக்கின் பொறியியலாளரும், கல்வி சீர்த்திருந்தவாதி மற்றும் கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக், லடாக்கின் குளிர்ந்த மற்றும் உயரமான தட்பவெப்பநிலை பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சோலார் டென்ட் ஒன்றின் முன்மாதிரியை உருவாக்கியது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.




டென்ட் பகுதிக்கு வெளியே -14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் போதும் டென்ட் உள்ளே +15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இதனால் கெரோசின் புகையோ அல்லது மாசுப்பாடோ இல்லை. 30 கிலோ மட்டுமே கொண்ட இதை எளிதாக எடுத்துச் செல்லலாம் என்றும், இதற்குள் 10 ராணுவ வீரர்கள் வரை தங்கலாம் என்றும் சோனம் வாங்சுக் தெரிவித்து இருக்கிறார். மேலும், இது இந்தியா தயாரிப்பு என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.






இந்தியா டுடே செய்தி நிறுவனம் களத்திற்கு சென்று சோனம் வாங்சுக் கண்டுபிடிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். சோனம் வாங்சுக் தன்னுடைய யூடியூப் சேனலில், சோலார் மிலிட்டரி டென்ட் குறித்த விளக்க வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.



" இந்த சோலார் டென்ட் முன்மாதிரி உருவாக்க சுமார் 5 லட்சம் செலவாகியது. உற்பத்தி மற்றும் அளவைப் பொறுத்து அதற்கு சமமாகவோ அல்லது குறைவான தொகையோ செலவாகும். மேலும், அவர்கள் பயன்படுத்தும் கன்டெய்னர் ரூம்ஸ் எங்கள் முன் மாதிரியைவிட சிறிய இடங்களை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 9-10 லட்சம். எங்களின் கூடாரம் அந்த தொகையில் பாதி மற்றும் இரு மடங்கு இடத்தை அளிக்கிறது.

சுற்றுலா பயணிகளுக்கும், எல்லையில் சாலைகள் அமைப்பில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இந்த கூடாரங்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கூடாரங்களில் வாழும் மக்களுக்கு மாசுபாடு இல்லாமல் வாழ முடியும் " என சோனம் வாங்சுக் Thebetterindia தளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்கள்.



இந்த சோலார் கூடாரம் குறித்து இந்தியா ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சோதனைக்கு பிறகுதான் உற்பத்தி குறித்த முடிவுகள் எடுக்கப்படும். சுமார் ஒரு வாரத்தில், அதனை சோதிப்பார்கள் என்றும் கூறி இருக்கிறார்.

" கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,600 அடி உயரத்தில் மற்றும் பாங்கோங் ஏரிக்கு செல்லும் வழியில் இந்த கூடாரத்தை நாங்கள் சோதிப்போம். இது சோதனை நோக்கங்களுக்காக கடினமான பகுதியாக இருக்கும் " என சோனம் தெரிவித்து இருக்கிறார்.



2016-ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில், 3 இடியட்ஸ் திரைப்படத்தின் நிஜ புன்சுக் வாங்டூ(கொசக்சி பசபுகழ்-நண்பன்) எனத் தலைப்பில் சோனம் வாங்சுக்-வின் பிரத்யேக பேட்டியை வெளியிட்டு இருந்தனர்.

சோனம் வாங்சுக் சோலார் டென்ட் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. அவரின் கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்திற்கு பயன்பட வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். எனினும், இது முன்மாதிரி கூடாரம் மட்டுமே, இதற்கான சோதனைகள் நடைபெற உள்ளதாக சோனம் வாங்சுக் தெரிவித்து இருக்கிறார்.

Links :

viral-sonam-wangchuk-innovation-solar-heated-tent-indian-army-galwan-valley-china-ladakh

Solar-Heated Tents For Indian Soldiers In Ladakh Invented By Sonam Wangchuk

The LADAKH Tent | World 1st Solar Heated Military Tent | Made in India | Sonam Wangchuk

Meet Sonam Wangchuk, the real life Phunsukh Wangdu of 3 Idiots

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை