YouTurn

திமுக கொடியுடன் மணல் கடத்திய வேறு கட்சிக்காரர் - வைரல் வீடியோ பற்றி எஸ்.பி தகவல் !

திமுக கொடியுடன் மணல் கடத்திய வேறு கட்சிக்காரர் - வைரல் வீடியோ பற்றி எஸ்.பி தகவல் !
தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது, மணல் கடத்தல் செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கின்றன. திமுக ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகும் கூட கட்சி பிரமுகர்கள் மணல் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திமுக கட்சிக்கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் அதிவேகமாக செல்லும் மணல் கடத்திய லாரியை போலீசார் துரத்திய பிறகு உதவி ஆய்வாளர் பேசுகிறார் என காரில் இருந்த நபர் செல்போனை கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.



Twitter link | Archive link  

இந்நிலையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியும், பின்னால் பாதுகாப்பிற்கு செல்லும் திமுக கொடி கட்டிய காரையும் போலீசார் துரத்தி பிடிக்கும் காட்சியுடன் நியூஸ் 18 வெளியிட்ட செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த ஒருவர் யூடர்னை டக் செய்து இருந்தார்.




சம்பவம் :

.

" தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது மணல் லாரி ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த லாரியை காவலர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.  லாரி ஓட்டுநர் போலீசாரை மோதுவதுபோல் சாலையோரத்தில் லாரியை ஒதுக்கி வேகமாக சென்றார். எனினும், போலீசார் விடாமல் விரட்டி பிடிக்க முயன்ற போது கட்சிக் கொடி(திமுக) கட்டிய காரில் வந்தவர்கள் போலீசார் செல்ல முடியாதபடி இருசக்கர வாகனத்திற்கு குறுக்கே காரை நிறுத்தினர்.

.

காரில் இருந்து இறக்கிய சிலர் சிறப்பு எஸ்.ஐ ஒருவர் பேசுவதாக கூறி செல்போனை கொடுத்துள்ளனர். அதற்குள் லாரி மாயமானது. இந்த சம்பவம் ஜூலை 1-ம் தேதி நிகழ்ந்தது. இருபது நாட்களாகியும் திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்யாத நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் விசாரணை நடத்தினார். மூவரை பிடிக்க தனிப்படை அமைந்துள்ளதாகவும், வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் " என இந்து தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும், காவல் உதவி ஆய்வாளர் பணத்திற்காக லாரியை பிடிக்காமல் விட்டு இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார்.

விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மற்றும் சிறுநல்லூரைச் சேர்ந்த பிரபு எனத் தெரிய வந்தது. காவல்துறையினர் பிரபுவை கைது செய்தும், லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். விஜயனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. வீடியோவில் இடம்பெற்றவர்கள் திமுக கட்சி பிரமுகர்களா என்ற விவரங்கள் குறித்து எங்கும் வெளியாகவில்லை. 

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், " காரில் வந்தவர்கள் திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள். சோதனைச் சாவடியில் காவலர்களிடம் இருந்து தப்பிக்கலாம் என நினைத்து அந்த கொடியை மாட்டி இருக்கிறார்கள். அவர்கள் பிறக் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள். சம்பவம் தொடர்பாக லாரி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, தலைமறைவாகி இருக்கும் நபர் விரைவில் கைது செய்யப்படுவார் " எனத் தெரிவித்து இருந்தார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை