YouTurn

சவுக்கு சங்கருக்கு பலத்த காயமெனத் தவறான தகவலைப் பரப்பும் பாஜக!

சவுக்கு சங்கருக்கு பலத்த காயமெனத் தவறான தகவலைப் பரப்பும் பாஜக!
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதற்காக யூடியூபர் சவுக்கு சங்கரை  கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்து, தேனியில் இருந்து கோவை அழைத்துச் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. இதில் சவுக்கு சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது.

ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில் பேசுகையில், பெண் காவலர்கள் பதவி உயர்விற்காக மூத்த அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தார். 

[video width="1280" height="720" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/05/jZgbBt50dE_OXfsZ.mp4"][/video]

சவுக்கு சங்கர் இப்படிப் பேசியதற்காக அவர் மீது கோவை சைபர் க்ரைம் காவல் துறை இந்தியத் தண்டனை சட்டப் பிரிவு 294(பி), 509, 353 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டது. 



அதாவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்றைய தினம் (மே.4) காலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரை காவல் துறையின் வாகனத்தில் தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் சவுக்கு சங்கருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் விபத்து தொடர்பான புகைப்படங்களைப் பகிர்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. 



இது தொடர்பாக காவல்துறை தரப்பில் சவுக்கு சங்கருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, காவலர்களுக்கே சிறு காயங்கள் ஏற்பட்டது, அவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர், இதையடுத்து சவுக்கு சங்கர் வேறோரு வாகனத்தில் கோவை அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விபத்து ஏற்பட்ட புகைப்படத்தைப் பார்க்கையில் காவல் துறையின் வாகனத்தைக் காட்டிலும் அதனுடன் சேர்ந்து விபத்துக்குள்ளான  காருக்கு தான் அதிகம் சேதாரம் ஏற்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. சவுக்கு சங்கர் காவல் துறையின் வாகனத்தில் தான் இருந்துள்ளார். 

சவுக்கு சங்கர் காவல் துறையினரைக் குறிப்பாகப் பெண் காவலர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், நேற்றைய தினம் அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

சவுக்கு சங்கர் இதற்கு முன்னர் நீதிபதிகள் வீட்டில் பணி செய்யும் பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார். இப்படித் தொடர்ந்து பேசியதின் விளைவாகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் தவறேதும் செய்யவில்லை எனத் தவறான தகவலை சிலர் பரப்புகின்றனர்.

மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

இவர் பேசிய பல பொய் மற்றும் தவறான தகவல்கள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஜாபர் சாதிக்கை வெளியே எடுக்கும் போது பால் கனகராஜ் திமுகவில் இருந்ததாகப் பொய் பரப்பும் சவுக்கு சங்கர் !
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை