YouTurn

S.V சேகர் பேச்சு..!! வெடித்தது ஒலிப் பெருக்கி.

தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று எண்ணூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர். பேரவை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று...

தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று எண்ணூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.



இதில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர். பேரவை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்களை சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.வி சேகர் வழங்கினார்.



மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பிறகு மேடையில் இருந்த எஸ்.வி சேகர் மாணவர்கள் மத்தியில் மைக்கில் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது மேடையின் அருகில் இருந்த ஒலி பெருக்கி திடீரென அதீத சத்தத்துடன் வெடித்தது.



ஒலி பெருக்கி வெடித்ததை கண்டு எஸ்.வி சேகர் , மாணவர்கள் என அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேடையில் இருந்தவர்களும், மாணவர்களும் அச்சத்தில் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.



ஒலிப் பெருக்கி வெடித்து தீப்பற்றிக் கொண்டதால் அந்த இடமே புகை மூட்டமாக மாறியது. உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.



ஒலிப்பெருக்கியே வெடிக்கும் அளவிற்கு எஸ்.வி சேகர் அப்படி என்ன பேசி இருப்பார் ????


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை