YouTurn

இந்து அல்லாதவர் டெலிவரி செய்யும் உணவு எனக்கு வேண்டாம் என்றவருக்கு Zomato-வின் பதிலடி.

இந்தியாவில் மதத்தை வைத்து பிரித்து பார்க்கும் பிரிவினை இத்தனை ஆண்டுகள் ஆகியும் மாறாமல் தொடர்கிறது. வீட்டில் இருந்தே உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளும் வாழ்க்கைக்கு மக்கள் மாறிய பிறகும், அதிலும் கூட மதத்தை பார்க்கும் மனிதர்கள் நமது நாட்டில் இருக்கவேச் செய்கின்றனர். Just cancelled an order on...

இந்து அல்லாதவர் டெலிவரி செய்யும் உணவு எனக்கு வேண்டாம் என்றவருக்கு  Zomato-வின் பதிலடி.
ந்தியாவில் மதத்தை வைத்து பிரித்து பார்க்கும் பிரிவினை இத்தனை ஆண்டுகள் ஆகியும் மாறாமல் தொடர்கிறது. வீட்டில் இருந்தே உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளும் வாழ்க்கைக்கு மக்கள் மாறிய பிறகும், அதிலும் கூட மதத்தை பார்க்கும் மனிதர்கள் நமது நாட்டில் இருக்கவேச் செய்கின்றனர்.


ஜூலை 30-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் , " எனது உணவை டெலிவரி செய்ய Zomatoin ஹிந்து அல்லாத ரைடரை நியமித்ததால் கேன்சல் செய்துள்ளேன். அவர்கள் ரைடரை மாற்றவும் முடியாது, பணத்தை திருப்பியும் அளிக்க முடியாது என கூறினார்கள். அதற்கு, டெலிவரியை பெற்றுக் கொள்ள உங்களால் என்னை கட்டாயப்படுத்த முடியாது, எனக்கு பணம் தேவையில்லை கேன்சல் செய்யுங்கள் போதும் எனக் கூறினேன் " என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் Zomoto india அவருக்கு ட்விட்டரில் பதில் அளித்து இருந்தது. சோமாட்டோ நிறுவனம் அளித்த பதிலில் " உணவில் மதம் இல்லை, உணவே ஒரு மதம் தான் " என பதிவிட்டு உள்ளனர்.

Zomoto அளித்த பதில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நிறுவனத்தின் ட்விட்டர் பதிலுக்கு சோமாடோ நிறுவனத்தின் நிறுவனர், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஓய் குரேஷி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.





உணவை டெலிவரி செய்பவர் ஹிந்து அல்லாதவர் இருக்கக்கூடாது எனக் கூறுபவர்களுக்கு, அந்த உணவை சமைத்தது யார், அதனை உற்பத்தி செய்தது யார் என தெரியுமா ? என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசம். இங்கு நவீன வாழ்க்கை முறைக்கு மாறிய பிறகும் சிலர் மதம் மற்றும் சாதிய பாகுபாட்டில் இருந்து மீளவில்லை. அவர்களை போன்றோர் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்களும், அதற்கான தக்க பதில்களும் தொடரும் !
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை