அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை.. காரணமென்ன ?

சென்னைக்கு அருகில் உள்ள திருமுல்லைவாயிலில் வெங்கடேஷ் - ரம்யா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி சுமார் 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி இவர்களது 6 மாத குழந்தை அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்தது.
கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த தகர ஷீட்டின் மீது விழுந்த குழந்தையை மீட்க அக்கம் பக்கத்தினர் முயன்று, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணியின்போது குழந்தையின் கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அப்போது வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், குழந்தையின் பெற்றோர் சரியாகக் கவனித்துக் கொள்ளாததே காரணமென விமர்சனங்களும் பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டது. சாதாரணமானவர்கள் தொடங்கி சில யூடியூப் பிரபலங்கள் வரை இப்பெற்றோரை பற்றி சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனால் குழந்தையின் தாய்க்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் 15 நாட்களுக்கு முன்பாக ரம்யா தனது குழந்தைகளுடன் கோவை காரமடைபெள்ளாதி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது பற்றிக் காவல் துறையிடம் பேசியதில், ரம்யா இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சல் சம்மந்தமாக சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் தற்கொலை எண்ணம் தொடர்பாகவும் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். முன்னரே மன உளைச்சல் இருந்த நிலையில் தற்போது குழந்தை தவறி விழுந்ததற்குப் பெற்றோரைக் காரணமென சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதின் விளைவாக ரம்யா தற்கொலை செய்திருக்கக் கூடும்.
ஏதாவது நிகழ்வு ஏற்பட்டால் அதன் உண்மைத்தன்மையை அறியாமலேயே அதைப்பற்றி கருத்துகளையும் கடும் விமர்சனங்களையும் சமூக வளைதளங்களில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே ரம்யா மன அழுத்தத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் அவருக்கு கூடுதல் மனச்சுமையை உருவாக்கியிருக்கக் கூடும். இது குறித்து காரமடை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு - உங்களுக்கு கொழந்த ஒரு கேடாடா ? pic.twitter.com/0FUskMECMf
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 28, 2024