YouTurn

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனைக் கொன்ற இளம்பெண்| விடுவித்த எஸ்.பி !

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனைக் கொன்ற இளம்பெண்| விடுவித்த எஸ்.பி !
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அல்லிமெடு பகுதியில் ஜனவரி 2-ம் தேதி அன்று 19 வயது இளம்பெண்ணை கத்தி முனையில் இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அப்பெண் இளைஞரின் கையில் இருந்த கத்தியை பிடிங்கி அவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலை சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் இளம்பெண் சரணடைந்து இருக்கிறார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இயற்கை உபாதைக்கு சென்ற போது அப்பெண்ணின் உறவுக்காரரான அஜித் குமார் என்பவர் குடிப்போதையில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

முதலில், இந்த வழக்கை IPC 302 கீழ் பதிவு செய்து இருந்தாலும், பாலியல் பலாத்கார முயற்சியின் போது தற்காப்பிற்காக கொலை செய்த காரணத்தினால் வழக்கை IPC சட்டப்பிரிவு 100-ன் கீழ் மாற்றி அந்த பெண்ணை கைது செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் எனத் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தெரிவித்து உள்ளார்.

[video width="1280" height="720" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2021/01/46143677_146166477118316_8260742044264687077_n.mp4"][/video]

இது தொடர்பாக எஸ்.பி அரவிந்தனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்கும், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் ஐபிஎஸ்-க்கும் நன்றி தெரிவித்து பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இதற்கு முன்பாக, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒருவர், குறிப்பாக பாலியல் பலாத்கார முயற்சியில் பெண்கள் செய்யும் கொலையானது IPC பிரிவு 100-ன் படி தற்காப்பிற்காக என சட்டம் கூறுவதாக முன்பே கட்டுரைகள் வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : பாலியல் வன்புணர்வின் போது தன்னை தற்கொள்ள பெண் சுட்டாலும் குற்றவாளி அல்ல – ஏ.டி.ஜி.பி ரவி
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை