YouTurn

குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜியாக நடித்தவரின் ஓவியமா ?

குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜியாக நடித்தவரின் ஓவியமா ?
ஜனவரி 23- தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேதாஜியின் ஓவியப்படத்தை திறந்து வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.



Twitter link | Archive link

இந்நிலையில், இந்திய ஜனாதிபதி திறந்து வைத்த நேதாஜியின் ஓவியப்படம் உண்மையான நேதாஜியின் உருவமே அல்ல, 2019-ல் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் நேதாஜியின் மரணம் குறித்து வெளியான " கும்னாமி " எனும் பெங்காலி திரைப்படத்தில் நடித்த நடிகர் ப்ரோசெஞ்சித் சாட்டர்ஜியின் புகைப்படம் என சமூக வலைதளங்களில் பரப்பத் துவங்கினர்.



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மைத்ரா, " ராமர் கோவிலுக்கு 5 லட்சம் நன்கொடை வழங்கிய பிறகு குடியரசுத் தலைவர் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் ப்ரோசெஞ்சித் ஓவியத்தின் மூலம் நேதாஜிக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் (ஏனெனில், அரசாங்கத்தால் அதை செய்ய முடியாது) " எனப் பதிவிட்டு இருந்தார். பின்னர், அதை நீக்கி உள்ளார்.

ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய குடியரசு தலைவரை ட்ரெண்ட் செய்யத் துவங்கினர். மீம்ஸ்கள் இந்தியா அளவில் பரவத் துவங்கி சர்ச்சை வெடித்தது.

உண்மை என்ன ?








தி ஹிந்துவின் அரசியல் பிரிவு ஆசிரியர் Nistula Hebbar, " ராஷ்டிரபதி பவனில் வெளியிடப்பட்ட உருவப்படம் நேதாஜியின் உறவினர் தரப்பில் இருந்து பெற்று கலைஞர் பரேஷ் மேத்தி வரைந்த ஓவியத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக " தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 












Twitter link | Archive link

நேதாஜியின் பேரனான சந்திர குமார் போஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், " இந்த உண்மையான புகைப்படத்தின் அடிப்படையில் பத்மஸ்ரீ பெற்ற ஓவியரான பரேஷ் மேத்தி வரைந்த ஓவியத்தை ராஷ்டிரபதி பவனில் ஜனவரி 23-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததாக " புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link



Twitter link | Archive link

2019-ம் ஆண்டு சந்திர குமார் போஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த உண்மையான புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதை கண்டறிய முடிந்தது. குடியரசுத் தலைவர் திறந்து வைத்த நேதாஜியின் ஓவியத்தில் கீழே ஓவியரின் கையெழுத்து இருப்பதை காணலாம்.



கும்னாமி திரைப்படத்தில் நடித்த நடிகர் ப்ரோசெஞ்சித் சாட்டர்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில், பரேஷ் மேத்தி வரைந்த ஓவியத்துடன் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.



Twitter link

இந்த மொத்த சர்ச்சையும் முற்றிலும் போலியானது மற்றும் போலியான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவன் அதிகாரிகளும், அந்த ஓவியம் நடிகரின் உருவம் என வதந்திகள் பரவுவது குறித்து மறுப்பு தெரிவித்ததோடு, காட்டமான பதிலையும் அளித்து இருப்பது தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை