பாகிஸ்தான் ட்ரக் முழுக்க மறைந்திருக்கும் ஆட்கள்.. இந்தியா எனப் பரப்ப முயன்றவர்கள் !
தேசிய சாலையில் நிற்கும் கண்டெய்னர் கதவை திறந்தால் உள்ளே அமைதி மார்க்கம் என கீழ்காணும் வீடியோ தற்போது தமிழில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனை செய்யும் போலீசார் கதவை திறக்கச் சொல்லும் பொழுது உள்ளே 10-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருப்பதை காண முடிந்தது. சமூக...

Facebook link | archive link
சாலையில் உள்ள டோல் அறிவிப்பு பலகையில் இஸ்லாமாபாத் என இடம்பெற்று இருப்பதையும், காவலர்களின் உடையை வைத்தும் இந்த சம்பவம் நிகழ்ந்தது இந்தியா அல்ல, பாகிஸ்தான் என்பதை எளிதாகவே அறிந்து கொள்ளலாம். ஆனால், முதலில் இந்த வீடியோவை டெல்லியில் நிகழ்ந்ததாக பரப்பி உள்ளார்கள்.

தமிழக பாஜகவின் செயலாளர் அனு சந்திரமௌலி என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வீடியோவை டெல்லியில் நிகழ்ந்ததாக பதிவிட்டு, பின்னர் பாகிஸ்தானில் நிகழ்ந்தது என மாற்றியுள்ளார்.


Facebook link | archive link

தமிழக பாஜக செயலாளர் தன்னுடைய பதிவை மாற்றிக் கொண்டாலும், சில முகநூல் பக்கங்கள் மற்றும் குழுக்களில் இடத்தின் பெயரை குறிப்பிடாமல் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் சம்பவம் நிகழ்ந்தது இந்தியா என தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடிய பொழுது, பாகிஸ்தானில் ஊரடங்கு இருக்கும் நேரத்தில் இஸ்லாமாபாத் சாலையில் சென்ற ட்ரக் வாகனத்தில் 19 குடிமக்கள் மறைந்து இருந்த போது பிடிக்கப்பட்டதாக The Express Tribune செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
WATCH: Despite #Lockdown across Pakistan, 19 citizens caught hiding in a truck on Islamabad Motorway
Video via @bilalfqi #CoronavirusinPakistan pic.twitter.com/ZEIAZfWzNn
— The Express Tribune (@etribune) April 2, 2020
Twitter link | archive link
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க ஊரடங்கை அறிவித்த போது பாகிஸ்தான் நாட்டில் ட்ரக்கில் மறைந்து செல்லும் நபர்கள் பொறுப்பற்றவர்களே. பகிரும் செய்தியை உண்மையான தகவல்களுடன் பகிர்வதே சரியானது. தவறான தகவல்களை பகிர வேண்டாம்.