பகுத்தறிவு கற்பித்த பெரியாருக்கே திமுக எம்.பி அலுவலகத்தில் பால் அபிஷேகம்!

தந்தை பெரியாரின் பிறந்தநாளை "சமூக நீதி நாளாக " கொண்டாட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையில், சேலம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் அலுவலகம் முன்பாக 40 அடி உயரத்தில் பெரியாருக்கு முழு உருவ கட் அட் வைக்கப்பட்டு, திமுகவினர் கலை நிகழ்ச்சியுடன் மரியாதை செலுத்தி கொண்டாடினர். அப்போது, பெரியார் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link
தன்னுடைய அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியின் புகைப்படங்களை எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் தன்னுடைய முகநூல் பக்கத்திலேயே பதிவிட்டு இருக்கிறார்.
Facebook link
திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " இன்று நானே எதிர்பார்க்கவில்லை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக பெரியாருக்கு 40 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கிறது. சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்மையான ஹீரோ தந்தை பெரியார் தான் எனச் சொல்லி உணர்ச்சி வசப்பட்டு பால் அபிஷேகம் செய்து இருக்கிறார்கள். இந்த பால் அபிஷேகம் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைக்கு உகந்தது இல்லை என்று சொன்னாலும், இன்றைய இளைஞர்கள் தந்தை பெரியார் தான் எங்களுக்கு ஹீரோ என்று சொல்கிறார்கள " எனப் பேசி இருக்கிறார்.
திமுக எம்.பியே பெரியாரின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தது பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளுக்கே நேர் எதிரானது எனக் கூறிவிட்டு, இளைஞர்கள் பெரியாரை ஹீரோவாக பார்க்கிறார்கள் என்பதால் இப்படி செய்வதாக புதுவிதமான விளக்கத்தை அளித்து இருக்கிறார். திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் தேமுதிகவில் இருந்து 2016-ல் திமுகவில் இணைந்தவர்.
திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகன்களுக்கே கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது தவறான காரியம் என பலரும் கூறிக் கொண்டிருக்கையில், பகுத்தறிவு பேசிய தந்தை பெரியாரை ஹீரோவாக சித்தரித்து கட் அவுட், பால் அபிஷேகம் செய்வது மிகப்பெரிய முரணாக இருக்கிறது. இது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமே தவிர, வேறொன்றுமில்லை !