YouTurn

இந்தியாவை அச்சுறுத்தும் பொய் செய்திகள்!

இந்தியாவில் 886 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துவதால், இணையத்தின் வழியாகப் பரப்பப்படும் போலிச் செய்திகளின் தாக்கமும் பரவலானதாகவே இருக்கும்.

இந்தியாவை அச்சுறுத்தும் பொய் செய்திகள்!

இணைய வசதி பரவலாக அறிமுகமானதால் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், போலி செய்திகள் என்னும் பிரச்சனையும் அதன் உடன் விளைவாக வந்தது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டு 886 மில்லியனாக இருந்தது. இத்தனை பரவலான மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால், இணையத்தின் வழியாகப் பரப்பப்படும் போலிச் செய்திகளின் தாக்கமும் பரவலானதாகவே இருக்கும்.


image.png


’World Economic Forum’ வெளியிட்ட 2024க்கான ’உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை’யில் தவறான தகவல், போலிச் செய்திகள் ஆகியவை பரப்பப்படுவது குறுகிய கால அபாயத்தில் முதல் இடத்திலிருந்தது. அதேபோல், உலகளவில் அதிக அளவில் தவறான/போலித் செய்திகளை பரப்புவதில் முதல் இடத்தில் ’இந்தியா’ இருந்தது குறிப்பிடத்தக்கது. 


தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவது என்பது உலகளவில் பிரச்சனைக்குரியதாக தற்போது பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதே சமூக வலைத்தளங்களை பயன்படுத்திப் பொய் செய்திகள் பரப்பப்படுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. 2019 தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் பற்றிய பொய் செய்திகளைப் பரப்புவது பிரச்சார யுத்தியின் ஒரு அங்கமாகவே கையாளப்பட்டதாக ஆய்வறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 



2020ஆம் ஆண்டிற்குப் பிறகு Generative AI என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வருகை இந்த பொய் செய்திகள் பரப்பும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியிருப்பதாகத் தெரிகிறது. பெரிதாகத் தொழில்நுட்ப அறிவு இல்லாத சாதாரண நபர்கள் கூட Deep Fake போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி புகைப்படங்கள் அல்லது வீடியோகளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்ப முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தத்ரூபமான புகைப்படங்கள், வீடியோகளை உருவாக்குவதால் போலி செய்திகள் மிகப் பரவலாகச் சென்று சேர்கிறது. 

image.png


மேலும் YouTube போன்ற சமூக வலைத்தளங்கள் தங்களது தளத்தில் உள்ள சிறிய வீடியோகளை (Shorts) அதிக நேரம் பார்க்க வைப்பதன் மூலமாக வருவாய் ஈட்ட விரும்புகிறது. இந்த நோக்கத்திற்கு ஏற்றாப் போல அவர்களை மென்பொருள் வழிமுறைகள் (algorithms) கூட மாற்றியிருக்கின்றன. இதனால் சரிபார்க்கப்படாத வீடியோக்கள் இந்த சமூக வலைத்தளங்களில் மிக சாதாரணமாக உலவி வருகின்றன. 


இதேபோல், டிவிட்டர் தளத்தை அமெரிக்கப் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு, அந்தத் தளத்தில் பயனர்கள் பதிவேற்றம் செய்யும் தகவல்களைக் கண்காணித்துச் சரி பார்க்கும் துறையில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான நபர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 


மேலும், நம்பகமான பயனர்களுக்கும், பிரபலமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ’Blue Tick’ அங்கீகாரத்தைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் ஒன்றாக மாற்றப்பட்டது. இப்படிப் பணம் செலுத்தி அங்கீகாரம் பெற்ற பின்னர், இந்த பயனர்களுக்குக் கிடைக்கும் பிரபலத்தைப் பொறுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது ‘எக்ஸ்’ என்று அழைக்கப்படும் டிவிட்டர் தளத்தில் பகிரப்படும் தகவல்களின் நம்பத்தன்மையை வெகுவாக பாதித்தது.


தேர்தல் காலத்தில் மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களிலும், போர் கலவரம் போன்ற சமூக அமைதியின்மை நிலவும் காலத்திலும் பொய் செய்திகள் சமூகத்தில் பரப்பப்படுகிறது. கடந்த 2024 அக்டோபர் மாதம் கனமழை பெய்த போதும், டிசம்பர் மாதம் ஃபெங்கல் புயல் தாக்கிய போதும் பல்வேறு தவறான தகவல்களும் பொய் செய்திகளும் பரப்பப்பட்டது இதற்கான உதாரணங்களாகும்.


இத்தகைய சூழலில்தான் ’Fact Checking’ என்று சொல்லப்படக்கூடிய உண்மை சரிபார்ப்பு பணியின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. தரவுகளும், சமூக ஊடகங்களில் உள்ள பயனர்களால் உருவாக்கப்படும் தகவல்களும் (User Generated Content) ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் தவறான தகவல்கள், பொய் செய்திகள் ஆகியவை பொதுமக்களின் முடிவெடுக்கும் திறன் மீது பெரிய தாக்கம் செலுத்தும். இது மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பதில் கூட தாக்கம் செலுத்துவதாக இருக்கிறது. இதனால், பொய் செய்திகள் தவறான தகவல்கள் ஆகியவற்றை கண்டறிந்து அடையாளப்படுத்துவது பணி என்பது மிக முக்கியமானது. இந்தவகையில்தான்,  ’Fact Checking’ என்னும் உண்மை சரிபார்ப்பு பணி முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை