YouTurn

ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை தடை செய்ய உரிய சட்டம் வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை!

ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை தடை செய்ய உரிய சட்டம் வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை!
ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என ஏராளமான விளம்பரங்கள் வெளியாகின்றன. ஆனால், இதனால் பணத்தை இழப்பவர்கள் குறித்து யாரும் பேசுவதில்லை, இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னவென்று யூடர்ன் வீடியோ வாயிலாக விளக்கி இருந்தோம். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஆன்லைனில் பணம் கட்டி விளையாடப்படும் ரம்மி உள்ளிட்ட சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு  அறிவுறுத்தி உள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் தோட்டத்தில் நண்பர்கள் உடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது கூடங்குளம் போலீசார் தங்களின் மீது வழக்குப் பதிவு செய்தனர். பொது இடத்தில் சீட்டு விளையாடினால் தான் குற்றம். எனவே இந்த வழக்கை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எவ்வாறு ரம்மி விளையாட இலவசமாக அனுமதிக்கிறார்கள். தமிழகத்தில் லாட்டரி சீட்டை தடை செய்தது போன்று ஆன்லைன் மூலம் விளையாடும் ரம்மி போன்ற விளையாட்டை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் எஸ்3த்ரீ, பாக்கெட் 52, போக்கர்டங்கல் போன்ற பல்வேறு இணைய விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். வேலையில்லாத இளைஞர்களின் நேரம் மற்றும் திறனை இதுபோன்ற விளையாட்டுகள் கெடுக்கின்றன. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் " என அறிவுறுத்தி உள்ளார்.



ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடும் ரம்மி போன்ற விளையாட்டுகள் தொடர்பாக உரிய சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை