YouTurn

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!
ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடன் தொல்லைக்கு ஆளானவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழகத்தில் தடை செய்யும் அவசர சட்டத்தை  தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்து இருக்கிறார்.

இந்த அவசர சட்டம், 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888-ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம் மற்றும் 1859-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிக்கு சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர சட்டத்தினபடி,

  1. இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும், அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அதுதொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும்.

  2. தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

  3. ஆன்லைன் விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம் மற்றும் 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.




இந்தியாவில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை ஒவ்வொரு மாநிலமாக தடை செய்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை இந்திய அளவில் முழுவதுமாக தடை செய்து, அதற்கு பயன்படுத்தப்படும் செயலிகளை முழுமையாக நீக்கினால் மட்டுமே சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை