YouTurn

நித்தியானந்தாவிடம் ஆசி பெறும் சின்மயி: மார்ஃபிங் புகைப்படம் !

" Metoo " விவகாரத்திற்கு பிறகு பாடகி சின்மயி பதிவிடும் கருத்துக்கள், பதிவுகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள், எதிர்ப்புகள், கிண்டல்கள் என இருந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசிய சின்மயி தன் தாயருடன், பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவிடம் மலர் வாங்குவது போன்ற ஓர் புகைப்படம்...

நித்தியானந்தாவிடம் ஆசி பெறும் சின்மயி: மார்ஃபிங் புகைப்படம் !
" Metoo " விவகாரத்திற்கு பிறகு பாடகி சின்மயி பதிவிடும் கருத்துக்கள், பதிவுகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள், எதிர்ப்புகள், கிண்டல்கள் என இருந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசிய சின்மயி தன் தாயருடன், பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவிடம் மலர் வாங்குவது போன்ற ஓர் புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் இப்புகைப்படமானது மார்ஃபிங் செய்யப்பட்டவை என்பதை நன்றாக கவனித்தவர்களுக்கு புரியும். சின்மயி மற்றும் அவரின் தாயார் இருவரும் அர்ச்சகர் ஒருவரிடம் இருந்து பிரசாதம் வாங்கும் புகைப்படத்தை நித்தியானந்தா உடன் இருப்பது போன்று மாற்றியுள்ளனர்.



ஓராண்டிற்கு மேலாக பரவி வரும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை நவம்பர் 25-ம் தேதி தன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி , " இந்த புகைப்படம் போலியானவை என தெளிவுப்படுத்திய பிறகும் ஏன் மீண்டும் பரப்பி வருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதை அவர்கள் இலவசமாக செய்கிறார்களா அல்லது இதற்கு பணம் கொடுக்கப்படுகிறதா ? " எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.



Twitter link | archived link

நித்தியானந்தா மேடையில் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தையும், சின்மயி பூஜையில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தை சரியாக கூட மார்ஃபிங் செய்யவில்லை என சிலர் கிண்டலும் செய்து உள்ளனர்.



Proof links :

Chinmayi clarifies on photo with Nithyananda

Chinmayi twitter post 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை