YouTurn

நெஸ்லேவின் 60% உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை.. பரபரப்பை ஏற்படுத்திய அந்நிறுவனத்தின் ரிப்போர்ட் !

நெஸ்லேவின் 60% உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை.. பரபரப்பை ஏற்படுத்திய அந்நிறுவனத்தின் ரிப்போர்ட் !
மேகி நூடுல்ஸ், கிட் கேட் போன்ற மிக பிரபலமான உணவு பொருட்களை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் பெரும்பாலான பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றதாக இல்லை என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெஸ்லே தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் உயர் நிர்வாகிகளிடையே இருக்கும் காணொளி அறிக்கை (presentation) லண்டனை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் பார்வைக்கு வந்துள்ளது.

அதில் நெஸ்லே, அதன் பிரதான உணவு மற்றும் பானங்கள் தயாரிப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை “ஆரோக்கியத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரையறையை பூர்த்தி செய்யவில்லை" என்பதையும், "தங்களது சில உணவு தயாரிப்புகள் எவ்வளவு புதுப்பித்தாலும் ஒருபோதும் அது ஆரோக்கியமாக இருக்காது" என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் செல்லப்பிராணிகளுகான உணவு பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்காக தயாரிக்கப்படும் சில தயாரிப்புகளை தவிர்த்து பார்த்தால், அந்நிறுவனத்தின் வருவாயின் அடிப்படையில் 37% உணவு பொருட்கள் ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையின் கீழ் 5 க்கு 3.5 மேல் மதிப்பீட்டை அடைகிறது. இது பொதுவாக நன்மதிப்பு இல்லை.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் :

• நெஸ்லே நிறுவனத்தின் 96% பானங்களும், ( சுத்தமான காபி தயாரிப்புகளை தவிர்த்து)
99% மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் ஆரோக்கியத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரையறையை பூர்த்தி செய்யவில்லை

• இங்கிலாந்தில் அதிகப்படியான விற்பனையை கொண்டுள்ள பல நெஸ்லே தயாரிப்புகள் , உணவு தர நிர்ணய அமைப்பின் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புக்கான மதிப்பீட்டில் சிகப்பு (அபாயம்) மதிப்பீட்டை பெற்றுள்ளது. நான்கு வரிசை கிட்காட்டில் 20 கிராம் சர்க்கரை உள்ளது, இது கிட்டத்தட்ட ஐந்து டீஸ்பூன் சர்க்கரைக்கு சமம் ஆகும்.

• மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் நீர் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சிறப்பாக மதிப்பெண் பெற்றுள்ளன. 82 சதவீத நீர் சார்ந்த தயாரிப்பு பொருட்களும், 60 சதவீத பால் தயாரிப்பு பொருட்களும் வரையறையை பூர்த்தி செய்து உள்ளன.

• குழந்தைகளுகான உணவு தயாரிப்பு மூல பொருட்கள், செல்லப்பிராணிக்கான உணவு மற்றும் குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு பிரத்யேக உணவுகளை உருவாக்கும், நெஸ்லேவின் சுகாதார அறிவியல் பிரிவுகளின் பொருட்கள் குறித்தான விவரங்கள் எல்லாம் அந்த தரவுவில் இடம்பெறவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால், பரவலாக அனைவராலும் வாங்கப்படும் உணவு பொருட்களின் தர அளவுகள் தான் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த தரவில் உள்ள உணவு பொருட்கள் மூலம் தான் அந்நிறுவனம் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டு வருவாயை (72.7 பில்லியன் பவுண்டு) ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• மேலும் , "நம் தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். ஆனாலும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் அழுத்தம் மற்றும் நுகர்வோரின் கோரிக்கைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் வெளியுலகின் ஆரோக்கியத்திற்கான வரையறையை நாம் எட்டவில்லை. குறைவான செயல்திறனையே கொண்டுள்ளோம்" என நெஸ்லே நிறுவனம் ஒப்புக்கொண்டது அந்த காணொளி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் , "ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்திறனை புதுப்பிக்க நிறுவன அளவிலான திட்டத்தில் செயல்பட்டு வருகிறது .பல தசாப்தங்களாக (decades) எங்கள் முயற்சிகள் வலுவான அடித்தளத்தை உருவாக்குகின்றன. . . எடுத்துக்காட்டாக, கடந்த இரண்டு தசாப்தங்களில் எங்கள் தயாரிப்புகளில் உள்ள சர்க்கரைகள் மற்றும் சோடியத்தை கணிசமாகக் குறைத்துள்ளோம், கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் சுமார் 14-15 சதவீதம் குறைத்து உள்ளோம்." என அவ்வறிக்கையில் நெஸ்லே குறிப்பிட்டுள்ளது.

அந்நிறுவத்தின் தலைமை நிர்வாகி, மார்க் ஷ்னீடர், நுகர்வோர் ஆரோக்கியமான உணவை விரும்புவதாக ஒப்புக் கொண்டார். எனினும் நெஸ்லே மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கப்படும் 'பதப்படுத்தப்பட்ட' உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என்ற கூற்றுக்களை அவர் நிராகரித்தார்.

"Good food Good life" ( நல்ல உணவு நல்ல வாழ்க்கை) எனும் அடிப்படையை முன்னிறுத்தி செயல்படும் நெஸ்லே நிறுவனத்திற்கு இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறை அல்ல. இந்தியாவில் ஏற்கனவே மேகி நூடுல்ஸ் தரமற்று இருப்பதாக ஆய்வுககளில் தெரியவந்ததை அடுத்து, அதன் விற்பனையை தடை செய்ததும், பின்னர் சில மாதங்களில் தரம் உயர்த்தப்பட்டது என மறுஆய்வில் தெரிவிக்கப்பட்டு மீண்டும் சந்தைப்படுத்த பட்டது குறிப்பிடத்தக்கது.

Links :

Nestl-says-60-brands-unhealthy-despite-slashing-salt-sugar-levels

Nestlé document says majority of its food portfolio is unhealthy
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை