YouTurn

தேசியக் கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்!

தேசியக் கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்!
மத்திய அரசு வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகையில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். எனினும், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக நாளை (24/08/2020) முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இதற்காக இணையதள முகவரியும் அளிக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்கள் தேசியக் கல்விக் கொள்கையை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். அதனுடைய லிங்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி : https://innovateindia.mygov.in/nep2020/

தேசியக் கல்விக் கொள்கை 2020 (தமிழில்) : NEP_2020_Tamil_PrivateTranslation (1)

Drive link : https://drive.google.com/file/d/1Qphvg292JRSIQmmUDnNokR584EorYSLa/view?usp=drivesdk
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை