YouTurn

NeoCov மனிதர்களுக்கு இன்னும் பரவவில்லை, கோவிட்19-ன் புதிய மாறுபாடும் இல்லை !

NeoCov மனிதர்களுக்கு இன்னும் பரவவில்லை, கோவிட்19-ன் புதிய மாறுபாடும் இல்லை !
சீனாவின் வூகான் நகர விஞ்ஞானிகள் " NeoCov (நியோகோவ்) " எனும் புதிய வகை கொரோனா வைரசைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்துள்ளதாகவும், அதிக பரவல் வேகமும், 3-ல் ஒருவருக்கு மரணம் என அதிக உயிரிழப்பு விகிதத்தை கொண்டிருக்கும் என தகவல் வெளியிட்டு உள்ளதாகவும் இந்திய அளவில் அனைத்து செய்தி ஊடகங்களில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவின் வூகான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், " கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த " நியோகோவ் " வைரல் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை www.biorxiv.org தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால், நியோகோவ் வைரல் முதல்முதலில் 2013-ம் ஆண்டில் விவாதிக்கப்பட்டது, அதன் பிறகு 2014-ல் " Rooting the phylogenetic tree of middle East respiratory syndrome coronavirus by characterization of a conspecific virus from an African bat " எனும் தலைப்பில் அறிக்கைகள் வெளியாகின. இது முன்பே தென்ஆப்ரிக்காவில் வௌவால்களிடம் கண்டறியப்பட்டது.



கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த நியோகோவ் வைரல் ஆனது வௌவால்களிடம் காணப்படுகிறது. இதில் மரபணு மாற்றம் ஏற்பட்டு மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நியோகோவ் வைரல் இன்னும் மனிதர்களுக்கு இடையே பரவவில்லை. இது கோவிட்-19 உடைய புதிய மாறுபடும் அல்ல. 



இதற்கிடையில், " நியோகோவ் என்பது மெர்ஸ்கோவ் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பழைய வைரஸ். இது DPP4 ஏற்பிகள் வழியாக செல்களுக்குள் நுழைகிறது. இதில் புதியது என்னவென்றால், நியோகோவ் வௌவால்களின் ace2 ஏற்பிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் புதிய பிறழ்வு ஏற்படாதவரை அவை மனித ace2 ஏற்பிகளை பயன்படுத்த முடியாது " என மகாராஷ்டிரா மாநில கோவிட்-19 பணிக்கழுவின் உறுப்பினரும், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் சஷாங் ஜோஷி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

மனிதர்களுக்கு ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு விலங்குகள் ஆதாரமாக உள்ளன. பொதுவாக, கொரோனா வைரஸ் விலங்குகளில்(குறிப்பாக வௌவால்கள்) இருந்து தான் வருகின்றன. ஆகையால், நியோகோவ் வைரஸ் வௌவால்களிடம் கண்டறியப்பட்டு உள்ளதாக வெளியான ஆய்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த நியோகோவ் வைரஸ் வௌவால்களிடம் மட்டுமே காணப்படுகிறது, இதுவரை ஒரு மனிதரைக்கூட நியோகோவ் வைரஸ் பாதிக்கவில்லை, அதனால் யாரும் இறக்கவும் இல்லை. நியோகோவ் வைரஸ் கோவிட்-19 உடைய புதிய மாறுபாடு அல்ல. ஆகையால், தேவையற்ற பதற்றங்களை தவிர்க்கவும்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை