YouTurn

ராஜஸ்தானில் நீட் எழுதிய தமிழக மாணவர்கள்..!

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கினர். ஆனால், ராஜஸ்தான் மையங்களில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுத ஒதுக்கப்படவில்லை என அரசை சார்ந்தவர்களும், சில சமூக வலைத்தள வாசிகளும் கூறிக் கொண்டு...

ராஜஸ்தானில் நீட் எழுதிய தமிழக மாணவர்கள்..!
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கினர். ஆனால், ராஜஸ்தான் மையங்களில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுத ஒதுக்கப்படவில்லை என அரசை சார்ந்தவர்களும், சில சமூக வலைத்தள வாசிகளும் கூறிக் கொண்டு வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் இருந்து பல மாணவர்கள் ராஜஸ்தானில் உள்ள நீட் மையங்களுக்கு தேர்வு எழுத சென்றனர் என்பதே உண்மை.

தமிழ்நாட்டின் தென்காசியைச் சேர்ந்த சுபாஷ் கோபிநாத் என்ற மாணவருக்கு ராஜஸ்தானின் உதய்பூர் மையம்ஒதுக்கியுள்ளது சி.பி.எஸ்.இ. சென்னையில் இருந்து 2311 கி.மீ தொலைவில் உள்ள உதய்பூர் நகருக்கு நீட் தேர்வு எழுத தனது தந்தையுடன் சென்றுள்ளார். தன் நீட் விண்ணப்பத்தின் போது திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய மூன்று மையங்களை மட்டுமே தேர்வு செய்ததாகவும், ராஜஸ்தானில் தேர்வு மையம் வழங்கியது அதிர்ச்சியை அளித்ததாக மாணவன் சுபாஷ் தெரிவித்துள்ளார். மாநிலப் பாடத்தில் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர் சுபாஷ். வட இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே ஆங்கிலம் மொழியில் பேச முடிவதாகவும், தான் பார்த்த ஒரு சில ஹிந்தி படங்களில் இருந்து சில வார்த்தைகள்( உன் பெயர் என்ன) கற்றுக் கொண்டதாகவும் மாணவன் சுபாஷ் மற்றும் அவருடன் சென்றவர்கள் கூறியுள்ளனர்.

அவருடன் சேர்த்து அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 மாணவர்களுக்கு உதய்பூர் மையம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.சுபாஷ் மாணவன் மட்டுமின்றி பல மாணவர்களுக்கு ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூர், உதய்பூர், கோடா, அஜ்மீர், ஜோத்பூர், பிகானர் உள்ளிட்ட மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. சுபாஷ் போன்ற மாணவர்கள் நீட் தேர்விற்காக ராஜஸ்தான் வரை சென்றாலும், சில மாணவர்கள் தேர்வு எழுத செல்லவில்லை என்பதே வேதனையான உண்மை.

ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொண்டு பேசும் போது, இங்கு தமிழக மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ராஜஸ்தானில் மாணவர்கள் தேர்வு எழுதவே இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. நம்மை தொடர்பு கொண்டவர்களை வரவேற்று தேவையான உதவியை செய்து வருகிறோம் என்றார்கள். செய்தி சேகரிப்பதற்காக ராஜஸ்தான் சென்றுள்ள ரிப்போர்டரை தொடர்பு கொண்டோம். 6.15 மணிக்கு வர வேண்டிய ரயில் இன்று தாமதமாக 7.30 க்கு தான் வந்தடைந்துள்ளது. இதில், மூன்று மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது தமிழ்நாட்டு மையத்திலேயே எழுத விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், இங்கு வழங்கி விட்டார்கள் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

உதவி வேண்டி வந்த 1,500 அழைப்புகளில் ஏழை மாணவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ததாகவும், ராஜஸ்தான் மையத்திற்கு செல்ல உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், அதற்கும் ஏற்பாடு செய்ய தயாராக இருந்தும் மாணவனின் அச்சத்தால் உதவி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளனர் care and welfare .ஆக, தமிழக மாணவர்கள் ராஜஸ்தானிற்கு நீட் எழுத செல்லவில்லை என்று கூறியது முற்றியும் பொய் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.  மாணவர்களின் விருப்பத் தேர்வு நகரங்களை தாண்டி சி.பி.எஸ்.இ ஆல் ராஜஸ்தான் நீட் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டதன் விளைவே வசதியில்லா பல மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதையே கடினமாக்கியுள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று கூறி வந்த தமிழகத்தை, இனி தேர்வு மையத்தை தமிழகத்தில் வையுங்கள் என்று வேண்டும் நிலைக்கு மாற்றியது நீட் தேர்வை கொண்டு வந்தவர்களின் தந்திரம்.

TN boy travels 3,100km for NEET
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை