YouTurn

நீட் மசோதாவிற்கு தமிழக பாஜக ஆதரவு அளித்ததாக தவறான தகவலைப் பேசிய எம்பி டி.ஆர்.பாலு !

நீட் மசோதாவிற்கு தமிழக பாஜக ஆதரவு அளித்ததாக தவறான தகவலைப் பேசிய எம்பி டி.ஆர்.பாலு !
நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ரவி மீண்டும் சபாநாயருக்கே திருப்பி அனுப்பியது பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், நீட் விலக்கு விவகாரத்தில் ஆளுநர் ரவியின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கிறார். எம்பி டி.ஆர்.பாலு தன் உரையின் போது, நீட் விலக்கு மசோதாவிற்கு தமிழக சட்டமன்றத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்து உள்ளனர், ஏன் தமிழக பாஜக கூட ஆதரவு தெரிவித்து உள்ளதாக தவறான தகவலைப் பேசி உள்ளார்.



2021 செப்டம்பர் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு அதிமுகவினர் ஆதரவு அளித்தனர், ஆனால் பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.



Twitter link 

இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், " அரசு மசோதாவை கொண்டு வந்த போது சட்டசபையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். கடந்த மாதம் நிகழ்ந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் தமிழ்நாடு பாஜக மசோதாவிற்கு எதிராக போராடி, வெளிநடப்பு செய்தோம் " என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.


நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி சபாநாயருக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 5-ம் தேதி மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என தமிழக பாஜக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை