YouTurn

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன ?

2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து களம் இறங்கிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி முன்பிருந்த வாக்கு சதவீதத்தை விட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை காண முடிந்தது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தலில்...

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன ?
2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து களம் இறங்கிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி முன்பிருந்த வாக்கு சதவீதத்தை விட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை காண முடிந்தது.

தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20 ஆண்கள், 20 பெண்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டன. மே 23-ம் தேதி வெளியான தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சி எந்தெந்த தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள், வாக்கு சதவீதம் ஆகியவற்றை காண்போம்.



1. காஞ்சிபுரம் (62,771)
2. கன்னியாகுமரி (17,069)
3. கரூர் (38,543)
4. கிருஷ்ணகிரி (28,000)
5. நாமக்கல் (38,531)
6. பெரம்பலூர் (53,545)

நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கட்சி அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 84,979 வாக்குகளையும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 17,069 வாக்குகளையும் பெற்றுள்ளார். 14 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கினை பெற்றுள்ளனர்.



தமிழகத்தில் 37 தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 16,45,185. நாம் தமிழர் கட்சி 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 3.79 % ஆகும்.

மேலும் படிக்க : தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் யாருக்கு ?

இது தமிழக தொகுதிகளின் நிலவரமாகும். புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட ஷர்மிளா பேகம் 22,857 (2.89%) வாக்குகளை பெற்று உள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.

(நன்றி : இளையதலைமுறை)

Proof :

Election Commission official  
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை