YouTurn

நிலவில் சாய்பாபா முகம் எப்படி ?

சாய்பாபா உருவம் நிலவில் தெரிவதாக நேற்றிரவு ஒரு படத்துடன் செய்தி பரவியது. பல பேர் ரோட்டிலும் வீட்டு மாடியிலும் நின்று அண்ணாந்து நிலவை பார்த்தது மட்டும் இல்லாமல் தெரிந்தவர் அனைவருக்கும் கூப்பிட்டு 'நிலால சாய்பாபா தெரியுறார் சீக்கிரம் பாருங்க ' என பகிர சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. சிலர் அதை...

நிலவில் சாய்பாபா முகம் எப்படி ?
சாய்பாபா உருவம் நிலவில் தெரிவதாக நேற்றிரவு ஒரு படத்துடன் செய்தி பரவியது. பல பேர் ரோட்டிலும் வீட்டு மாடியிலும் நின்று அண்ணாந்து நிலவை பார்த்தது மட்டும் இல்லாமல் தெரிந்தவர் அனைவருக்கும் கூப்பிட்டு 'நிலால சாய்பாபா தெரியுறார் சீக்கிரம் பாருங்க ' என பகிர சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. சிலர் அதை போட்டோஷாப் என்று தெரிந்து கலாய்த்து விட்டு சென்றாலும் பலர் உண்மையாகவே தெரிவதாக நம்பவும் செய்தனர்.



இது ஒன்றும் புதிதல்ல , இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் பெங்குளூருவில் இதே வதந்தி பரவியது.  உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் , யாருக்கு தெரியலையோ அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என செய்தி வேறு வடிவேலு காமெடியை நியாபகப்படுத்தியது.

இந்த வதந்தியில் பரப்பப்பட்ட படமானது போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது.  சரி இது எப்படி photoshop செய்ய முடியும் ? என்பதை கீழே காண்க .





உண்மையில் நிலவில் முகம் தெரியாது. சிலருக்கு தெரிவது போன்று தோன்றினாலும் அது வெறும் ஒளியியல் மாயை மட்டுமே . ஏதேனும் காட்சிகளை பார்க்கும் போது அதனை ஒற்றுமைப்படுத்தி மூளையானது உருவகத்தை வடிவமைத்து கொள்ள்கிறது. நிலவில் காதலியின் முகம் தெரிவதாக கூறுவதும் இது தான்.

நேற்றிரவு எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம் கீழே :
அதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை , இது இப்போ எடுத்தது என்கிறார் வசந்தகுமார் .
நேற்று இரவு முகநூலில் வெளியிட்டுள்ளார் .



Photo Courtesy: N.Vasanthakumar

நாங்களும் நேற்று இரவு நிலவை பார்த்தபோது எங்களுக்கு தெரிந்தது இது தான் .

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை