YouTurn

வைரலாகும் பாகிஸ்தானில் சூறையாடப்பட்ட இந்து கோவிலின் வீடியோ.. என்ன நடந்தது ?

வைரலாகும் பாகிஸ்தானில் சூறையாடப்பட்ட இந்து கோவிலின் வீடியோ.. என்ன நடந்தது ?
பாகிஸ்தான் நாட்டில் முஸ்லீம்கள் கும்பல் ஒன்று இந்து கோவிலுக்குள் புகுந்து அடித்து நொறுக்கும் 3 நிமிட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. முழுமையாக கட்டப்படாத தோற்றத்தில் இருக்கும் இந்து கோவிலை தாக்கி, அங்குள்ள சிலைகளை உடைத்த சம்பவத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.



Facebook link | Archive link

ஆகஸ்ட் 4-ம் தேதி புதன்கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங் நகரில் இந்து கோவில் மீது முஸ்லீம் கும்பல் தாக்குதல் நடத்தி, சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர். அங்கு நிகழ்ந்த குற்றச் செயலை காவல்துறை தடுக்க தவறிய பிறகு, நிலைமையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



Twitter link

பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாப் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் வான்கவானி, குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்குமாறு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ உடன் சட்ட அமலாக்கத் துறைக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும், இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசாரின் அலட்சியம் மிகவும் வெட்கக்கேடானது என்றும், தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக தொடர் ட்வீட்களை வெளியிட்டு இருக்கிறார்.



Twitter link 



Twitter link 

" போங் பகுதியில் உள்ள பாடசாலையின் நூலகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவன் சிறுநீரைக் கழித்ததாக கூறப்படுகிறது. மத நம்பிக்கையை இழிவுப்படுத்தியதாக கூறி கடந்த வாரம் மத நிந்தனை சட்டத்தின் கீழ் சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிறுவன் மைனர் என்பதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த அவமதிப்பு செயலுக்கு பழி வாங்க வேண்டும் எனத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியான பிறகு, ஒரு கும்பல் கோவிலுக்கு வெளியே கூடி தாக்கத் தொடங்கியது " என மாவட்ட காவல்துறை அதிகாரி ரஹும் கூறியுள்ளதாக தி இந்துவில் வெளியாகி இருக்கிறது.

" சிறுவனின் செயல் குறித்து இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பாடசாலை நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன " என பாகிஸ்தானின் தி டவ்ன் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. எனினும், சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்த பிறகு மக்களை தூண்டிவிட்டு கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோவில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

கோவில் மோசமாக சேதமடைந்து உள்ளது, கோவிலின் ஒரு பகுதியும் தீக்கிரையாக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 100 இந்து கும்பங்களுக்கு மேல் வாழும் இப்பகுதியில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் உருவாக்கி இருக்கிறது.

இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கண்டனம் தெரிவித்து இருந்தார். தொடர் கண்டனங்கள் எழுந்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாக்குதல் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.



Twitter link 

" நேற்று ஆர்.ஒய்.கே, போங் நகரில் உள்ள கணேஷ் மந்திர் மீது நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்வதை உறுதி செய்யவும், காவல்துறையின் லட்சியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நான் ஏற்கனவே பஞ்சாப் ஐஜி-யிடம் கேட்டுக் கொண்டேன். அந்த ஆலயத்தை அரசு சரி செய்யும் " என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் படிக்க : பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தீ வைத்த வன்முறை கும்பல் !

கடந்த ஆண்டில், பாகிஸ்தானில் இந்து சாமியாரின் சமாதி மீது முஸ்லீம் கும்பல் தாக்குதல் நடத்தி தீயிட்டு கொளுத்திய சம்பவம் இந்தியா வரை பெரும் கண்டனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Links : 

muslim-mob-badly-damages-hindu-temple-in-central-pakistan

Mob attacks temple in Pakistan's Punjab, damages idols


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை