YouTurn

முதல் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்ன ?

இந்திய நாடாளுமன்ற தேர்தலில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிய நிலையில் அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. முதல் தேர்தலில் மநீம கட்சிக்கு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர்...

முதல் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்ன ?
இந்திய நாடாளுமன்ற தேர்தலில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிய நிலையில் அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. முதல் தேர்தலில் மநீம கட்சிக்கு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது.

தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் தவிர்த்து மொத்தம் 36 தொகுதிகளில் களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தளத்தில் அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் எந்தெந்த தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள், வாக்கு சதவீதம் ஆகியவற்றை தொடர்ந்து காண்போம்.



1. மத்திய சென்னை (92249)
2. வட சென்னை (103167)
3. தென் சென்னை (135465)
4. கோவை (145104)
5. ஈரோடு (47719)
6. நீலகிரி (41169)
7. பொள்ளாச்சி (59693)
8. சேலம் (58662)
9. ஸ்ரீபெரும்புதூர் (135525)
10. திருவள்ளூர் (73731)
11. திருப்பூர் (64657)

சென்னையில் மூன்று தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக கோவை தொகுதியில் 1,45,104 வாக்குகளையும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 8,590 வாக்குகளையும் பெற்றுள்ளது. 4 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்கினை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம்.



இக்கட்சி தமிழகத்தில் 36 தொகுதியில் போட்டியிட்டு பெற்ற மொத்த வாக்குகள் 15,75,620. மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவீதம் 3.63 % ஆகும். கமலின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத்தில் நாம் தமிழர் கட்சிக்கு இணையான வாக்கினை பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட டாக்டர்.எம்.ஏ.எஸ் சுப்ரமணியன் 38,068 (4.81%) வாக்குகளை பெற்று உள்ளார். புதுச்சேரியில் கமலின் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளது.

(நன்றி : இளையதலைமுறை)

Proof :

Election Commission official  
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை