YouTurn

சிவகார்த்திகேயன் வாரிசு நடிகரா ? தமிழக சினிமா பற்றி ஒன்றும் தெரியாத வடஇந்திய ஊடகம் !

சிவகார்த்திகேயன் வாரிசு நடிகரா ? தமிழக சினிமா பற்றி ஒன்றும் தெரியாத வடஇந்திய ஊடகம் !
லைவ் மின்ட் எனும் வடஇந்திய செய்தி ஊடகம், இந்தி சினிமா மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் சினிமாத்துறையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருப்பதாக " தென்னிந்திய திரைத்துறையில் நெபோடிசம் பற்றி அதிகம் பேசப்படவில்லை " எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது.



Archive link 

நெபோடிசம் எனும் வார்த்தை இந்தி திரைத்துறையை மையப்படுத்தி அதிகம் பேசப்பட்டதை அறிவோம். வாரிசு நடிகரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் மற்றவர்களின் வாய்ப்புகளோ அல்லது திறமையோ மறுக்கப்படுவதாக இந்தி திரைத்துறையில் இருந்து பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்தி திரைத்துறையில் மட்டும் நெபோடிசம் இல்லை, தென்னிந்திய மாநிலங்களிலும் நெபோடிசம் பிரச்சனை இருப்பதாக லைவ் மின்ட் இணையதளம் கட்டுரை வெளியிட்டது.

அக்கட்டுரையில் முதன்மையாக தெலுங்கு சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்களின் பெயர்கள் பெரிய அளவில் இடம்பிடித்தன. பின்னர், மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உள்ள வாரிசு நடிகர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சார்ட் வெளியிடப்பட்டு உள்ளது.



அதில், தமிழ் திரைத்துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுஷ் பெயர் இடம்பெற்று உள்ளது. ஆனால், தனுஷின் அண்ணன் இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகவன் பெயருக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை வெளியிட்டு இருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் எந்தவொரு பின்புலமும் இன்றி நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன் எனத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக உயர்ந்து இருக்கிறார். அவரின் பெயரை நெபோடிசம் எனும் தலைப்பில் வெளியிட்டு இருப்பது அபத்தமான செயல்.

தமிழ் திரைத்துறையில் உள்ளவர்கள் பற்றி ஒன்றும் தெரியாமல் நெபோடிசம் என்ற தலைப்பில் சிவகார்த்திகேயன் பெயரை சேர்ந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை