YouTurn

புலம்பெயர்ந்த 15 தொழிலாளர்கள் ரயிலில் சிக்கி மரணம்| உறங்கியவர்களுக்கு நேர்ந்த கதி.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிற மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலம் நிகழ்ந்ததை கண்டோம். சில நாட்களுக்கு முன்பாக தொழிலார்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், அவுரங்காபாத் பகுதியில் ரயில் பாதையில்...

புலம்பெயர்ந்த 15 தொழிலாளர்கள் ரயிலில் சிக்கி மரணம்| உறங்கியவர்களுக்கு நேர்ந்த கதி.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிற மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலம் நிகழ்ந்ததை கண்டோம். சில நாட்களுக்கு முன்பாக தொழிலார்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், அவுரங்காபாத் பகுதியில் ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா பகுதியில் உள்ள பெரிய ஸ்டீல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் 20 பேர் 7-ம் தேதி மாலை அங்கிருந்து பூஷாவால் செல்ல புறப்பட்டு உள்ளனர்.  முதலில் சாலை மார்க்கமாக நடந்து வந்தவர்கள் பின்னர் ரயில் பாதையில் நடந்து சென்றுள்ளனர். 36 கி.மீ நடந்து வந்த பிறகு அவுரங்காபாத் நோக்கிய ரயில் பாதையில் உறங்கி உள்ளனர்.



ரயில் பாதையில் உறங்கிய 14 பேர் அதிகாலை 5.30 மணியளவில் வந்த சரக்கு ரயிலில் சிக்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை படுகாயமடைந்த இரண்டு பேரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், அதில் ஒருவர் இறந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில ரயில் விபத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்து உள்ளார்.



கடந்த சில நாட்களாக நாட்டில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் மரணம் ஒருபுறம் இருக்க ஆந்திராவில் ரசாயன வாயு வெளியேறி மக்கள் இறந்தது, ரயில் ஏறி தொழிலாளர்கள் இறப்பு என மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி செல்கிறது.

Links : 

15 migrant workers run over by goods train in Maharashtra

Maharashtra: Train runs over migrant workers in Aurangabad
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை