YouTurn

எங்கள் வேட்பாளர் மேயரானால் மீரட் பெயர் "நாதூராம் கோட்சே நகர்" என மாற்றப்படும் : இந்து மகாசபா

எங்கள் வேட்பாளர் மேயரானால் மீரட் பெயர் "நாதூராம் கோட்சே நகர்" என மாற்றப்படும் : இந்து மகாசபா
த்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் பெயரை காந்தியைக் கொன்ற " நாதூராம் கோட்சே நகர் " என மாற்றுவோம் என்று இந்து மகாசபா அமைப்பு அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



Twitter link 

" இந்து மகாசபாவிற்கு போதுமான கவுன்சிலர்கள் கிடைத்து மேயர் பதவிக்கு வெற்றிப் பெறும் பட்சத்தில் மீரட் பெயர் " நாதூராம் கோட்சே நகர் " என மாற்றப்படும். அதேபோல், மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பெயர்கள் மாற்றப்பட்டு இந்து பெயர்கள் வைக்கப்படும் " என இந்து மகாசபா அமைப்பின் தேசிய துணைத் தலைவர் பண்டித் அசோக் சர்மா தெரிவித்து உள்ளார்.

இந்து மகாசபா அமைப்பின் மீரட் மாவட்ட புதிய தலைவர் அபிசேக் அகர்வால் கூறுகையில், " டிசம்பரில் மீரட் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அமைப்பானது போட்டியிட உள்ளது. முதலில் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே குறிக்கோள், அடுத்தது கோமாதாவை பாதுகாப்பது " எனத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.



மீரட்டின் பெயரை மாற்றி " கோட்சே " பெயரை வைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை வைத்து பிரச்சனை எழுவது இது முதல் முறையல்ல. 2019ம் ஆண்டில், மீரட் பெயரை " பண்டித் நாதூராம் கோட்சே நகர் " என மாற்றுமாறு உத்தரப் பிரதேச அரசிடம் இந்து மகாசபா கோரிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

1948ல் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதூராம் கோட்சே இந்து மகாசபாவின் உறுப்பினர் இருந்தவர். அதற்கு முன்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.  மகாத்மா காந்தியைக் கொன்ற நாதூராம் கோட்சேவை தீவிர வலதுசாரிகள் தூக்கிப் பிடிக்கும் காரியத்தை செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்து மகாசபா தொடர்ந்து கோட்சே புகழ் பாடி வருகிறது.

மகாத்மா காந்தியை கொன்ற ஒரு கொலையாளி பெயரை மீரட் நகருக்கு வைக்க வேண்டும் என வெளிப்படையாக தேர்தல் அறிக்கையாக இந்து மகாசபா தெரிவித்து வருவது சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.



links : 






பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை