மனோ தங்கராஜ் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவும் அவதூறு!
முன்னால் அமைச்சர் மனோ தங்கராஜின் குடும்ப நிகழ்வில் எடுக்கப்பட்ட படத்தைத் தவறான கண்ணோட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
தமிழ்நாடு துணை முதல்வராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் மாற்றங்களும் செய்யப்பட்டது. இம்மாற்றத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை மாற்றம் குறித்து அரசியல் வட்டாரத்தில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்நிலையில் மனோ தங்கராஜ் ஒரு பெண்ணுடன் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்கள் தவறான கருத்துக்களுடன் பரப்பப்படுகிறது.

பரவக் கூடிய புகைப்படங்கள் குறித்து யூடர்னில் இருந்து முன்னால் அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பை தொடர்பு கொண்டு பேசினோம். இந்த புகைப்படம் மனோ தங்கராஜின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது எனக் கூறினர். மேலும் அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களையும் யூடர்னுக்கு பகிர்ந்தார்.
அந்த படத்தில் மனோ தங்கராஜ் மற்றும் அப்பெண் மட்டுமின்றி மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருப்பதைக் காண முடிகிறது. குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட படத்தை அவதூறு பரப்பும் வைகையில் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர் (அப்பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் மற்றும் விவரம் வெளியிடப்படவில்லை). குடும்ப பிரச்சனையின் காரணமாக மனோ தங்கராஜின் தம்பி, அவர் மற்றும் அப்பெண் இருக்கும் படத்தை தவறாகப் பரப்பி இருக்கிறார்.