YouTurn

கேள்வி கேட்ட மாணவியிடம் பேராசியர் பாலியல் சீண்டல் ?| மாணவர்கள் போராட்டம் !

கேள்வி கேட்ட மாணவியிடம் பேராசியர் பாலியல் சீண்டல் ?| மாணவர்கள் போராட்டம் !
தலைமை பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத விதத்தில் நடந்து விட்டதாக கூறி, அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வந்த நிலையில் மாணவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஒருவர் முறையாக செமஸ்டர் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்காததை எதிர்த்து கேள்வி கேட்ட மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர் . அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவர்கள் கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கமும், மத்திய சென்னை மாவட்டத்தின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் மார்ச் 22 காலை 10 மணி அளவில் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று அறிவித்ததை அடுத்து, இன்று காலையில் மாணவர்கள் உள்பட பத்து பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

https://twitter.com/kavithazahir/status/1373703910074970115?s=19

இது குறித்து அத்துறை மாணவர் ஒருவரிடம் யூடர்ன் தொடர்பு கொண்டு பேசுகையில், “ தொல்லியல் துறையில் ஒரு பேராசிரியர், ஒரு தலைமை பேராசிரியர் மட்டும் தான் என்பதால் துறை தலைவரின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்” என தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விடுதி கட்டணம் செலுத்த வேண்டி பல்கலைக்கழகம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொல்லியல் துறையை சேர்ந்த மூன்று மாணவர்களை இந்த ஆண்டு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் உள்நோக்கத்துடன் தோல்வியடைய வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர் ," எங்களுடைய தேர்வு முடிவுகள் முறையாக அறிவிக்கப்படவில்லை, மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக இருந்தன, அதில் மூன்று பேர் தேர்வில் தோல்வி அடைந்தனர். நாங்கள் பல்கலைக்கழகத்திடம் மறுமதிப்பீடு வேண்டும் என முறையிட்டோம். பல்கலைக்கழகமும் வேறொரு பேராசியரை நியமித்து மறு திருத்தும் செய்ய உத்தரவிட்டது. இம்முறை அனைவரும் தேர்ச்சி பெற்றதால் மதிப்பீடு மீதான சந்தேகம் மிகுந்தது. மதிப்பெண்கள் உள்ளிட்ட தெளிவான தகவல்கள் எங்களுக்கு வழங்கவில்லை. திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மாதிரியை கேட்டபோது விடைத்தாள்கள் காணாமல் போய்விட்டது என்றும் மின்னஞ்சல் மூலம் வந்த விடைத்தாள்களை கொண்டு மறுமதிப்பீடு செய்ததாக பதில் அளித்தனர்.

முறையாக மதிப்பெண் விவரங்களை மாணவி ஒருவர் கேட்ட பொழுது, அவர் மாணவியிடம் பாலியல் ரீதியான தொடுதலில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியபின் வேண்டுமென்ற மறுபடியும் அதை செய்தார் என்று கூறினார் ”.



“பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை விசாரிக்க தனிக்குழு ஒன்றை நியமிக்குமாறு பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை, ஏதோ ஒரு குழுவை நியமித்தனர் . நாங்கள் விசாரணை அழைப்பை மறுத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக SFI (இந்திய மாணவர் சங்கம் ) மற்றும் மகளிர் சங்கம் காலை 10 மணிக்கு போராட்டம் அறிவித்த நிலையில், காலை 9.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண் உள்பட எங்கள் மாணவர்கள் 10 போரையும் போலீசார் வண்டியில் ஏற்றி சென்றுவிட்டனர். ஆதரவாக போராடிய SFI மாணவர்கள் 12 பேரையும் காயப்படுத்தி கைது செய்தனர் என்று கூறினார்.

இதுகுறித்து கேள்வி எழுப்ப பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்போது அவர்கள் அதை பற்றி பேச மறுத்துவிட்டனர்.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி) 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை