YouTurn

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றப் பள்ளிக்கல்வித்துறை !

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றப் பள்ளிக்கல்வித்துறை !
தமிழ்நாட்டில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20 கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், " எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும், இதற்கான பொறுப்பு சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்படும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக மாற்றப்படுவதாக " பேசி இருந்தார்.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டு அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் என்றால், அவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள், மாணவர் சேர்க்கையை யார் நடத்துவார்கள் என பெரும் கேள்விகள் எழுந்தன.



Twitter link





மேலும், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசுகளிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.



ஜூன் 9-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ், " எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நிரப்பப்படுவர் " எனக் கூறியுள்ளதாக செய்தி அறிக்கை வெளியாகி உள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை