YouTurn

Factcheck: பாலிடெக்னிக் மாணவர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதென்ன ?

Factcheck: பாலிடெக்னிக் மாணவர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதென்ன ?
தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், " பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம் " என அறிவித்ததாக சன் நியூஸ் சேனலில் வெளியான நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Twitter link  



ஏனெனில், பாலிடெக்னிக் முடிந்த மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் நேரடியாக 2-ம் ஆண்டு(lateral entry) சேர்ந்து படிக்கும் நடைமுறை ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வரும் போது, அதை புதிது போல அமைச்சர் அறிவித்து இருப்பதாக விமர்சனங்கள் உடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அமைச்சர் பொன்முடி கூறியதென்ன ? 



ஏப்ரல் 11-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் பொன்முடி, " சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் பாலிடெக்னிக் கல்வி முடித்த மாணாக்கர்களுக்கு, அதாவது பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடையாது என்று சொல்லிடாங்க. இந்த ஆண்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் முடித்த மாணாக்கர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்வதற்கு முதலமைச்சர் ஆணையிட்டு இருக்கிறார். அதுவும் இந்த ஆண்டில் இருந்து தொடரும் " எனப் பேசியுள்ளார்.

 

அதாவது, பாலிடெக்னிக் முடித்த மாணாக்கர்கள் நேரடியாக பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறுகிறார்கள். இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக சிஇஜி கிண்டி, எம்ஐடி குரோம்பேட்டை மற்றும் ஏசிடெக் கிண்டி ஆகிய கல்லூரிகளிலும் பொறியியல் படிப்பில் நேரடியாக இரண்டாமாண்டு மாணாக்கர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும் என்பதே அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் பாலிடெக்னிக் முடித்த மாணாக்கர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம் என்பதே முழுமையான மற்றும் தெளிவான செய்தி.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை